Monday, March 28, 2016

Kapaleeswarar Temple in Mylapore, Chennai, India

The Stately Temple

One of the sacred shrines in Tamil Nadu is Arulmigu Kapaleeswarar Temple in Mylapore, in Chennai City.
It is a Siva Temple, and the name of the Lord is ARULMIGU KAPALEESWARAR. The name of the Goddess is ARULMIGU KARPAGAMBAL.
It is a loverly temple with a Stately Spire or ‘Gopuram’ as it is called. There is a big tank on its West. The temple and the tank are surrounded by Broad streets on the four sides. The view of the temple and the tank is picturesque.
Mylapore is on the sea coast and the shore is away by half a mile of thickly populated residential area.

The Legend Behind The Temple

The name Mylapore is derived from the legend that the Goddess Uma worshipped Siva in the form of a peacock (or mayil in Tamil). We can see a representation of this legend on stone in a small Shrine under a Punnai tree (Sthala Vriksha) in the Courtyard of the temple.

Mylapore's Ancient Past

Ptolemy, the Creek Geographer (A.D. 90-168) has referred to Mylapore in his books as ‘Millarpha;,. It was apparently a weel-known sea port town with a flourishing trade. It must have also been a place of culture, as Saint, Tiruvalluvar the celebrated author of Tirukkurl, the Wordl-famous ethical treatise, lived in Mylapore nearly 2,000 years ago. The Saivite Saints of the 7th Century, Saint Sambandar and Saint Appar, have sung about the Shrine in their hymns.
St. Thomas, one of the aposties of Jesus, is reported to have visited Mylapore in the 2nd Century A.D. His tomb is in the St. Thomas basilica, a beautiful Cathedral about half a mile from the temple.
Mylapore fell into the hands of the Portuguese in A.D.1566, when the temple suffered demolition. The presne temple was rebuilt 300 years ago. There are some fragmentary inscriptions from the old temple, still found in the present Shrine and in St. Thomas Cathedral.
One enters the hall then, where Arulmigu Karpagambal is enshrined. In front of the Goddess, outside, is a Stone sculpture of a Lion, the mount of the Goddess. (Just as Nandi or the Bull is for Lord).

Daily And Special Servies

There are six daily Puja Services. Kala Santhi (morning) Uchchikala (Mid-day) Sayamkala (Evening) and Ardhajama (late Night). The evening Service will be picturesque as the Shodasa Upacharas (16 Propitiations) with waving of lights. etc. ared performed. Other special occasions are Pradhosa (13th day of new moon-full moon) Panchaparva. etc.

Temple 23: மயிலையே கயிலை!

‘கயிலையே மயிலை; மயிலையே கயிலை’ என்று இந்தத் தலத் தைப் போற்றுகின்றன புராணங்கள். ஒருமுறை கயிலை மலையில் அம்பாளுக்கு பிரணவம், பஞ்சாட்சரம் குறித்து உபதேசித்துக் கொண்டிருந்தார் சிவபெருமான். அப்போது, அழகிய மயில் ஒன்று தோகை விரித்து நடனம் ஆடிக்கொண்டிருந்தது. அதைக் கண்டு அம்பாளின் கவனம் சிதறியது. இதனால் கோபம் கொண்ட சிவ பெருமான், ‘பூலோகத்தில் மயிலாகப் பிறப்பாய்’ என்று அம்பாளை சபித்துவிட்டார்.
தனது தவற்றை உணர்ந்த அம்பிகை, ஸ்வாமியிடம் சாப விமோசனம் வேண்டினாள். அவளிடம், தொண்டைநாட்டுக்குச் சென்று தவமியற்றும்படி பணித்தார் சிவபெருமான். அதன்படி, தொண்டை
நாட்டில் அமைந்த இத்தலத்துக்கு மயிலுருவில் வந்த அம்பிகை, இங்கே புன்னை மரத்தின் கீழ் இருந்த சிவலிங்கத்தை பக்தி சிரத்தையுடன் வழிபட்டு வந்தாள். அம்பிகையின் பக்தியால் மகிழ்ந்த சிவபெருமான் அவளுக்குக் காட்சியளித்து சாப விமோசனம் தந்தார். அவரிடம் ‘இந்தத் தலத்திலேயே தாங்கள் கோயில் கொண்டு உலகத்தவர்க்கு அருள் பாலிக்கவேண்டும்’ என வேண்டிக்
கொண்டாள் அம்பிகை. அதன்படியே சிவனார் இங்கே கோயில் கொள்ள, அவருடன் அம்பாளும் கற்பகவல்லி எனும் திருப்பெயருடன் அருள்கிறாள். அவள் மயிலாக வந்து வழிபட்ட தலம் ஆதலால், இவ்வூரும் மயிலை என்று பெயர் பெற்றது.
‘கற்பகம்’ என்பதற்கு வேண்டும் வரம் தருபவள் என்று பொருள். இவளைத் தரிசித்துவிட்டே ஸ்வாமியைத் தரிசிக்கும்படியான அமைப்பு, இக்கோயிலின் சிறப்பம்சம். சைவ சித்தாந்தங்களும் சக்தியின் மூலமாகவே சிவத்தை அடையமுடியும் என்கின்றன. அதற்கு உகந்த முறையில் திகழ்கிறது கபாலீஸ்வரர் ஆலயம். இங்கு வந்து அம்பாளைப் பிரார்த்தித்தால், நினைத்தது நிறைவேறும்; எண்ணிய காரியங்கள் யாவும் ஈடேறும்.

ஏற்றம் தரும் ஏழு!

ஏழு என்ற எண்ணை அடிப் படையாகக் கொண்ட விஷயங்கள் மயிலையின் தனிச்சிறப்பு. கபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், காரணீஸ்வரர், மல்லீஸ்வரர், விருபாக்ஷீஸ்வரர், வாலீஸ்வரர், தீர்த்த பாலீஸ்வரர் ஆகிய மயிலையில் உள்ள ஏழு சிவாலயங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் எல்லாப் பேறுகளும் கிடைக்குமாம்.
அதேபோல் மயிலாப்பூரில் ஏழு தீர்த்தங்களும் சிறப்புடன் திகழ் கின்றன. அவை: கபாலி தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், கடவுள் தீர்த்தம் (கடல்), ராம தீர்த்தம்.

திடத்துமனமும் பொறுமையும் திறமையும் தரும்

    சிந்தனையும் அதி நுட்பமும்

தீனர்கள் இடத்தில் விசுவாசமும் என்றும் அவர்

    தீப்பசி தணிக்க நினைவும்

கடக்க அரிதான ஜனன கடல் கடந்து

    கதிகாண மெய்ஞ்ஞான மோனக்

கப்பலும் தந்துதவி செய்து ரக்ஷித்து

    கடைத்தேற அருள் புரிகுவாய்

விடக்கடு மிடற்றினன் இடத்தில் வளர் அமுதமே

    விரிபொழில் திருமயிலை வாழ்

விரைமலர்க்குழல் வல்லி மரை மலர்ப்பதவல்லி

    விமலி கற்பக வல்லியே


- திருமயிலை கற்பகாம்பாள் பதிகம்

பதிகத்தால் உயிர் பெற்ற பூம்பாவை!
பூசை ஆட்சிலிங்கம்

திருமயிலையில் வாழ்ந்து வந்த வணிகர் சிவநேசர்; சிறந்த சிவபக்தர். இவரின் ஏழு வயது மகள் பூம்பாவை. ஒரு நாள் பூப்பறிக்கச் சென்ற பூம்பாவையை பூநாகம் ஒன்று தீண்டியது. அவள் இறந்தாள். பெரும் துயரத் துடன் பூம்பாவையின் உடலை தகனம் செய்த சிவநேசர், அவளின் எலும்பு மற்றும் சாம்பலை ஒரு குடத்தில் அடைத்து கன்னிமாடத்தில் வைத்திருந்தார்.
இந்த நிலையில், திருஞானசம்பந்தர் திருவொற்றியூருக்கு விஜயம் செய்தார். இதையறிந்த சிவநேசர் அங்கு சென்று, ஞானசம்பந்தரை வணங்கி அவரிடம், பூம்பாவைக்கு நிகழ்ந்ததை விவரித்தார். அவர் மேல் இரக்கம் கொண்ட சம்பந்தப் பெருமான் திருமயிலைக்கு வந்தார். ஸ்ரீகபாலீஸ்வரரை வணங்கினார். பிறகு, பூம்பாவையின் சாம்பல் நிறைந்த குடத்தை எடுத்து வரச்செய்த ஞானசம்பந்தர், ‘மட்டிட்ட புன்னையங் கானல்...’ என்ற திருப்பதிகத்தைப் பாடினார். மாண்ட பூம்பாவை உயிர் பெற்று, 12 வயதுப் பெண்ணாக வெளி வந்தாள். பெரிதும் மகிழ்ந்த சிவநேசர், தன் மகள் பூம்பாவையை
மணந்துகொள்ளுமாறு திருஞானசம்பந்தரை வேண்டினார். ஆனால், சம்பந்த பெருமான் மறுத்துவிட்டார். இதன் பிறகு நெடுநாள் வாழ்ந்த பூம்பாவை, தொடர்ந்து சிவ வழிபாட்டில் திளைத்திருந்தாள். இறுதியில் சிவ தியானத்தில் இருந்த நிலையில் முக்தியடைந்தாள்.
சிங்கார வேலன்

முருகனுக்கும் உகந்த திருத்தலம் மயிலை. சிக்கல் திருத்தலத்தில் சக்தி வேல் பெற்ற முருகப் பெருமான், மயிலைக்கும் வந்து வழிபட்டு சிங்கார வேல் ஒன்றைப் பெற்றாராம். எனவே, இங்குள்ள முருகனுக்கு சிங்கார வேலன் என்று பெயர்.

இவ்வாறு தன்னை வணங்கிய முருகப்பெருமானிடம், ‘அண்ணன் விநாயகனையும் வணங்கு!’ என்று பணித்தார் ஈசன். அதன்படியே இங்குள்ள கணபதியையும் வணங்கி வழிபட்டார் கந்தவேள். இதனால் மகிழ்ந்த விநாயகர் ஆனந்தக் கூத்தாடினார். இவரே இங்கு நர்த்தன விநாயகராகக் காட்சி தருகிறார்.

பார்போற்றும் பங்குனிப் பெருவிழா!

சிவஸ்ரீ வெங்கடசுப்ரமணிய சிவாச்சாரியார்

ஈஸ்வரனுக்கு ஒப்பாக தனக்கும் ஐந்து தலைகள் என்று கர்வம் கொண்ட பிரம்மனின் ஒரு சிரத்தைக் கொய்து, அந்தக் கபாலத்தை கையில் ஏந்தியதால், கபாலீஸ்வரர் எனும் திருப்பெயருடன் சிவனார் அருளும் மிக உன்னதமான திருத்தலம் இது. ஸ்வாமி மேற்கு நோக்கி அருள்வது கூடுதல் விசேஷம்.

இந்தத் தலத்தின் சிறப்புக்குச் சிறப்பு சேர்ப்பது பங்குனிப் பெருவிழாவும், அதிலும் பிரதானமான அறுபத்து மூவர் திருவிழாவுமே! பங்குனிப் பெருவிழாவின் எட்டாம் நாளன்று காலையில், ‘பூம்பாவை உயிர்ப்பித்தல்’ நிகழ்ச்சி நடைபெறும். கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் பதிகம் பாடி பூம்பாவையை உயிர்ப்பித்த பின்னர், மண் குடுவையில் உள்ள வெல்லம் பிரசாதமாகத் தரப்படும். அஸ்தியில் இருந்து பூம்பாவையை ஞானசம்பந்தர் உயிர்ப்பித்ததை ஐதீகமாகக் கொண்டு இந்த பிரசாதம் வழங்கப்படுகிறது.
தொடர்ந்து மாலையில் 63 நாயன்மார்களுடன் விநாயகர், கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் ஆகியோர் நான்கு மாடவீதிகளில் நள்ளிரவு வரை வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். பக்தர்கள் தங்களால் இயன்றளவு தானம் வழங்குவது இவ்விழாவின் தனிச்சிறப்பு.

பத்தாம் நாள் காலை விழாவில்,  கபாலீஸ்வரர் தீர்த்தவாரி நடைபெறும். பிறகு, அம்பாள் மயில் உருவில் புன்னை மரத்தின் அடியில் இருக்கும் பெருமானை வழிபடுவார். பௌர்ணமி தினம் இரவு மயில் உருவம் நீங்கி சிவபெருமானைக் கரம் பிடிப்பாள் அம்பிகை. கல்யாணத் தடைகளால் வருந்தும் அன்பர்கள், இந்த வைபவத்தைத் தரிசித்து ஸ்வாமியையும் அம்பாளையும் வழிபட்டு வர, விரைவில் தடைகள் யாவும் நீங்கி கல்யாணம் கைகூடும்.

எத்தனை பெயர்கள்?

மயிலாப்பூர் என்ற பெயரே மயிலை என்று மருவியது. மயில் + ஆர்ப்பு + ஊர்= மயிலாப்பூர். இதற்கு, மயில்கள் நிறைந்த இடம் அல்லது மயில்கள் ஆரவாரம் செய்யும் ஊர் என்று பொருள். பிரமாண்ட புராணம் இந்தத் தலத்தை மயூரபுரி, மயூரநகரி ஆகிய பெயர்களால் குறிப்பிடுகிறது.

 உமையவள் மயிலாக வந்து இங்கு ஈசனை வழிபட்டதால்- மயிலை; சோமுக அசுரன் களவாடிச் சென்ற வேதங்களை மகாவிஷ்ணு மீட்டு வந்து இங்கு சேர்த்ததால் - வேதபுரி; சுக்ராச்சார்யார் இங்குள்ள ஈசனை வழிபட்டு அருள் பெற்றதால்- சுக்ரபுரி; மயிலை மற்றும் திருவொற்றியூரில் வாழ்ந்த கபாலிகர்கள் ஈசனைப் போற்றி வழிபட்டதால் - கபாலீச்சரம் என்றெல்லாம் வழங்கப்படுகிறது திருமயிலை.
மூவேந்தர் காலத்தில், புலியூர் கோட்டத்துப் புலியூர் நாட்டைச் சேர்ந்ததாக விளங்கிய மயிலை, வடமொழியில் ‘கேகயபுரி’ எனப்பட்டது. ‘மயிலாப்பி’ என்றும் இந்தத் தலம் அழைக்கப்பட்டதை அப்பர் பெருமானின், ‘மயிலாப்பிலுள்ளார்...’ என்ற திருத்தாண்டகத்தின் வரிகளில் இருந்து அறியலாம்.

திருமழிசை ஆழ்வார்- ‘மாமயிலை’ என்றும், திருமங்கை ஆழ்வார் - ‘மயிலை’ மற்றும் ‘மாமயிலை’ ஆகிய பெயர்களாலும், சுந்தரர் ‘தொன்மயிலை’ என்றும் குறிப்பிடுகின்றனர். மேலும் மயிலாப்பில், மயிலாப்பு, மயிலாபுரி ஆகிய பெயர்களும் இவ்வூருக்கு உண்டு.

ராசி கோயில்கள்!

ம் வாழ்க்கை, காலத்தின் கையில். ஆனால், அந்தக் காலம் கடவுளின் கையில்! அவன் காலகாலன் அல்லவா? தூய பக்தியுடன் அவன் திருவடிகளை சிக்கென்று பற்றிக்கொண்டால் போதும்; எப்படிப்பட்ட பொல்லாத காலத்தையும் அவனருளால் வென்றுவிடலாம்!
அவ்வகையில், இன்னல்கள், கடும் தோஷங்கள், நோய்நொடிகள் யாவும் நீங்கி, நமது வாழ்க்கை வளம் பெறவும், எவ்வித பிரச்னைகளாயினும் அவற்றை எதிர்கொண்டு வெல்லும் மன வல்லமை பெறவும் இறையருள் நமக்குத் துணைபுரிவதற்கு ஏதுவாக, உங்கள் ஒவ்வொருவரது ராசிக்கும் உரிய தெய்வங்கள் திருக்கோயில்கள் தரிசனம் இங்கே உங்களுக்காக!
பழநியாண்டவருக்கு நெய் தீபம்!
அஸ்வினி, பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தில் முதல் பாதம் இந்த ராசியில் அடங்கும். மேஷ ராசிக்காரர்களுக்கு அதிபதியாக செவ்வாய் இருக்கிறார். இவரை அங்காரகன், பூமிகாரகன் என்றெல்லாம் சிறப்பிப்பார்கள். இது ராணுவம் மற்றும் காவல் துறையினருக்கு உரிய கிரகம். செவ்வாய் பகவானின் அதிதேவதை முருகப்பெருமான். ஆக, இந்த ராசிக்காரர்கள் முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு.
மேஷ ராசியில் இடம்பெறும் அஸ்வினி ஞானத்தையும், பரணி அரச போகத்தையும் குறிக்கும். இந்த இருகோலங்களிலும் அருளாட்சி நடத்துபவர் பழநி முருகன். மேலும், கார்த்திகை நட்சத்திரத்துக்கும் உரிய தெய்வம் முருகனே என்பதால், இந்த ராசிக்காரர்கள் பழநிக்குச் சென்று வழிபடுவதால் விசேஷ பலன்களைப் பெறலாம். முருகப்பெருமானுக்கு உகந்த திருநாட்களில் பழநிக்குச் சென்று, நெய் தீபம் ஏற்றிவைத்தும், மலர்கள் சமர்ப்பித்தும் பழநியாண்டவனை வழிபடவேண்டும். பூக்களில் செம்பருத்தி, விருட்சம்பூக்கள் ஆகியவற்றைச் சமர்ப்பிக்கலாம். முருகப் பெருமானுக்கு நடைபெறும் விபூதி அபிஷேகத்தைத் தரிசித்து வழிபடுவதால் வினைகள் யாவும் தீரும்.
சஷ்டி திதி அன்று பழநிக்குச் சென்று வணங்கினால், வழக்குகள் சாதகமாகும்; பிரிந்தவர்கள் ஒன்றுசேர்வார்கள். செவ்வாய்க் கிழமைகளில் சென்று வழிபட்டால் நோய்கள் விலகும்; ஆயுள் ஆரோக்கியம் கூடும். வியாழக் கிழமையில் சென்று வழிபட்டால், கடன் சுமை நீங்கும்; அரசாங்கம் தொடர்பான பிரச்னைகள் முடிவுக்கு வரும். பழநிக்குச் செல்பவர்கள் போகரின் ஜீவசமாதியையும் தரிசித்து  வரலாம்.
சென்னைக்கு அருகில் உள்ள சிறுவாபுரி முருகன் கோயிலும் இந்த ராசிக்காரர்கள் வழிபட உகந்த தலமாகும். இயலாதவர்கள், வீட்டுக்கு அருகில் உள்ள ஆலயங்களில் அருளும் முருகனை வழிபட்டு வரலாம்.
சந்தோஷம் தரும் சந்தன அபிஷேகம்!
ரிஷப ராசிக்கு அதிபதி சுக்ரன். இவரை கட்டடக்காரகன், கல்யாணக்காரகன் என்றெல்லாம் சிறப்பிப்பார்கள். வாகனம், சினிமா, நாட்டியம், இசை மற்றும் கலைகளுக்கு இவரே அதிபதி! கார்த்திகை 2,3,4ம் பாதங்கள், ரோகிணி மற்றும் மிருகசீரிஷத்தின் முதல் இரண்டு பாதங்கள் இதில் அடங்கும். ராசிநாதன் சுக்கிரனின் தன்மை, மற்றும் இந்த ராசியில் அடங்கும் நட்சத்திரங்கள் அடிப்படையில் இந்த ராசிக்காரர்கள் தரிசித்து வழிபடவேண்டிய தெய்வம், கோவை சத்தியமங்கலம் செல்லும் வழியில் உள்ள கோவில்பாளையத்தில் அருளும் கால காலேஸ்வரர்.
நந்தி பகவானின் அருள்பெற்ற ராசியாக ரிஷபம் உள்ளதால், இவர்களின் வழிபாட்டுக்கு இக்கோயிலே உகந்தது. இங்குள்ள மூலவர் விசேஷ யோகங்களை அளிப்பவர். இவருக்கு சந்தன அலங்காரம் விசேஷம்! இந்த ராசிக்கு தற்போது கண்டகச் சனி நடப்பதால், ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூத்தி போன்றவற்றை இந்த ஆலயத்தில் செய்யலாம். இக்கோயிலில் பிரதோஷம், சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருவாதிரை நட்சத்திர தினங்களில் சென்று வழிபடுவது சிறப்பு. ஸ்வாமிக்கு தும்பைப்பூ மாலை அணிவித்தோ, வில்வார்ச்சனை செய்தோ வழிபடலாம்.  இத்தலம் தவிர, விஸ்வாமித்திரர் தவம் புரிந்த தலமான முசிறியில், சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்துக்குச் சென்றும் வழிபடலாம்.
அல்லல் நீங்க, அரங்கனை வழிபடுங்கள்!
மிதுனத்துக்கு அதிபதியாக புதன் வருகிறார். கல்வி மற்றும் கலைக்கு புதன் உரியவராகிறார். இந்த ராசிக்காரர்கள் சமயோசித புத்தி, எழுத்தாற்றல், பேச்சாற்றல் மிக்கவராகத் திகழ்வர். மிருகசீரிடம் 3, 4 ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2 3ம் பாதம் இதில் அடங்கும். இவர்களுக்குப் பூர்வபுண்யாதிபதியாக சுக்கிரனும் பாக்கியாதிபதியாக சனியும் வருகின்றனர்.  இவர்களின் பலம் பெருக, திருவரங்கநாதரை வழிபடவேண்டும். இதனால் வேலைவாய்ப்பு, குழந்தை பாக்கியம்,  கல்வியறிவு கிடைக்கும். அரங்கனை வழிபடச் செல்லும்போது தாமரை, துளசி மாலை அல்லது முத்து மாலை சாற்றி வழிபடலாம். ஏகாதசி திதி, புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகள் வழிபட உகந்த நாட்கள். குறிப்பாக, பஞ்சமி மற்றும் அஷ்டமி திதி நாட்களில் சென்று வழிபடுவதால் பன்மடங்கு பலன் உண்டு.
திருவரங்கம் மட்டுமின்றி, திருவாரூர் அருகே உள்ள திருக்கண்ணங்குடி ஸ்ரீ லோகநாத பெருமாளையும், திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாளையும் வழிபட்டு வரலாம்.
திருவருள் தரும் திருவக்கரை அன்னை!
கடக ராசிக்கு அதிபதி சந்திரன். இவர் தண்ணீருக்கு அதிபதியாக இருக்கிறார். புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் ஆகியன இதில் அடங்கும். சந்திரன் ஆயக்கலைகள் அறுபத்து நான்குக்கும், தாய்க்கும் உரிய கிரகமாகவும் விளங்குகிறார். ஆகவே, திண்டிவனம் அருகில் திருவக்கரையில் மூன்றாம் பிறையுடன் அருளும் சந்திரமெளலீஸ்வரரை இவர்கள் வழிபடுவது சிறப்பு. வராக நதிக்கரையோரம், பல்லவர்களின் கலைவண்ணத்தில் உருவான இந்தக் கோயில் மிகவும் பழைமையானது. இங்குள்ள சித்தர் சந்நிதியில் அமர்ந்து தியானிப்பது அவ்வளவு விசேஷம்! இங்குள்ள துர்கை அம்மன் மிகுந்த வரப்ரசாதியானவள். இவளை வழிபட மாங்கல்ய பலம் கூடும். அத்துடன் கோயிலின் முகப்பில் ஈசான்யத்தை நோக்கி அருள்பாலிக்கும் வக்ரகாளியம்மனை வழிபட்டால் அரசு பதவி கிடைக்கும்; வழக்குகள் வெற்றி அடையும்; திருஷ்டி தோஷங்கள் நீங்கும். கடகத்தின் ராசிநாதனாகிய சந்திரன் தேய்ந்து வளரும் தன்மை கொண்டது ஆதலால், இந்த அம்மனை வலதுபக்கமாக ஐந்து முறையும், இடது பக்கமாக நான்கு முறையும் வலம் வந்து வழிபடுவது சிறப்பு. இதனால் முழு சந்திர பலமும் வாய்க்கும்.
பஞ்சமி, அஷ்டமி, நவமி, பௌர்ணமி மற்றும் அமாவாசை திதிகளில் இங்கு சென்று வழிபடுவதால் கூடுதல் பலன் கிடைக்கும். ஞாயிறு, வெள்ளிகளில் அரளிப்பூ, எலுமிச்சைப்பழ மாலை அணிவித்து அம்பாளை வணங்கினால், சகல தோஷங்களும் நீங்கி சந்தோஷம் உண்டாகும். இக்கோயில் தவிர, அரியலூருக்கு அருகிலுள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் அருளும் ஸ்ரீ பிரகதீஸ்வரர், கோவை மாவட்டம் நவகரையில் அருளும் துர்கா பகவதி அம்மன் ஆகிய தெய்வங் களையும் வழிபடலாம்.
யோகங்கள் தரும் மரகத நடராஜர்!
இந்த ராசிக்கு அதிபதி சூரியன். இவர், பிதுர்க் காரகனாகவும் ஆத்ம காரகனாகவும், அரசியல், அரசாங்க பதவி, தலைமை குணத்தை தருபவராகவும் விளங்கு கிறார். மகம், பூரம் மற்றும் உத்திரம் முதல் பாதம் ஆகியன இதில் அடங்கும். அளவற்ற ஆற்றல் கொண்ட சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தையே பெயராகக் கொண்ட உத்தரகோசமங்கையில் அருளும் மங்கள நாதரையும், பூண்முலை அம்மனையும் இவர்கள் வழிபடுவது சிறப்பு! ராமநாதபுரத்துக்கு தென்மேற்கில் 15 கி.மீ தொலைவிலுள்ளது இத்தலம். கயிலாயத்துக்கு இணையானது என்பதால், இதைத் தென்கயிலாயம் எனப் போற்றுவர். இங்கு அருளும் இறைவன் இத்தலத்தின் தாமரைப்பொய்கையில் யோகிகளுக்குக் காட்சியளித்ததாகப் புராணங்கள் சொல்கின்றன. இங்குள்ள மரகத நடராஜரை வணங்கினால், வாழ்வில் அனைத்து வகை யோகங்களும் வந்து சேரும். மல்லிகை மற்றும் வில்வத்தால் இங்குள்ள இறைவனை அர்ச்சித்து வழிபடுவது நல்லது. ஞாயிறு, வியாழக்கிழமைகளிலும், அமாவாசை, தசமி, திரயோதசி திதி நாட்க ளிலும் சென்று வழிபட்டால், நினைத்தது நிறைவேறும்.
இத்தலம் மட்டுமின்றி, உத்திரமேரூருக்கு அருகிலுள்ள திருப்புலிவனத்தில் அருளும் ஸ்ரீஅமிர்தகுஜாம்பாள் சமேத ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரர் மற்றும் சிம்ம தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில்  சென்று வணங்கலாம். மேலும், ஆவுடையார் கோவிலில் அருளும் ஸ்ரீ யோகாம்பிகை உடனுறை ஸ்ரீ ஆத்மநாதரையும், சண்டிகேஸ்வரரையும் வணங்கி வழிபடலாம்.
நல்லன அருளும் நரசிம்மம்!
இந்த ராசிக்கு அதிபதியாக புதன் வருகிறார். ஏட்டறிவைவிட பகுத்தறிவும், பட்டறிவும் இவர்களுக்கு அதிகம் இருப்பதால், நெருக்கடி நேரத்திலும் நியாயம் தவற மாட்டார்கள். உத்திரம் (2,3,4 பாதங்கள்), அஸ்தம், சித்திரை (1,2பாதங்கள்) ஆகிய 3 நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்கள் இந்த ராசியில் இடம் பெறுகின்றனர்.
கன்னி ராசி, புதனுடைய அம்சம். நெருப்பு கிரகமான சூரியனின் நட்சத்திரமான உத்திரம், தண்ணீர் கிரகமான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரம், போர் கிரகமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் ஆகியன இந்த ராசியில் இடம்பெறுகின்றன. கோபம், யுத்தம், சாந்தம் ஆகிய மூன்று குணங்களும் இந்த ராசிக்கு உண்டு. இந்த 3 குணங்களுக்கும் ஏற்ற கடவுளாக நரசிம்மர் விளங்குகிறார்.
இவர்கள், கடலூர் மாவட்டத்தில் உள்ள சிங்கிரிக்குடியில் அருள்பாலிக்கும் அருள்மிகு நரசிம்மர் திருக்கோயிலில் உள்ள பிரகலாதவரதனை புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வழிபடுவது நலம் தரும். தயிர் சாதம், புளி சாதம் தானம் வழங்கலாம். சுமார் 2000 ஆண்டுகள் பழைமைமிகு பெருமைகள் கொண்டது இத்திருத்தலம். இந்தக் கோயிலைத் தவிர, சென்னை கோயம்பேட்டில் உள்ள வைகுண்டவாசல் பெருமாள் கோயிலிலும் வழிபடலாம்.
ஐயம்பாளையத்தில் அருள் கிடைக்கும்!
சுக்கிரனுடைய அம்சத்தில் வரும் இவர்கள் கலை உணர்வு கொண்டவர்களாகவும், நீதி தவறாதவர்களாகவும் இருப்பார்கள். இந்த ராசியைச் சேர்ந்தவர்களில் வியாபார நுணுக்கம் அறிந்திருப்பவர்கள் ஏராளம். சித்திரை 3, 4ம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ம் பாதங்களைச் சேர்ந்தவர்கள் இந்த ராசியில் அடங்குவார்கள்.
இந்த ராசி அன்பர்கள் வழிபடவேண்டிய ஆலயங்களாகப் பல ஆலயங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு அருகில் ஐயம்பாளையத்தில் சிறு குன்றின் மீது எழுந்தருளி இருக்கும் உத்தமராய பெருமாளை வழிபடுவது நன்மைகளைத் தருவதாக அமையும். ஆளுமைத் திறன் அதிகம் கொண்டவர்களாகவும், அநியாயத்தைக் கண்டு அஞ்சுபவர்களாகவும் விளங்குவர். ஆனால் அவ்வப்போது முன்னுக்குப் பின் முரணாக முடிவெடுத்து தவிப்பவர்கள். இந்த பெருமாளை வழிபடுவதால், இந்த ராசிக்காரர்களின் தடுமாற்றங்கள் நீங்கும்.
சனி பகவான் சுகாதிபதியாகவும் பூர்வபுண்ணியாதிபதியாகவும் வருவதால் இந்தப் பெருமாளை சனிக்கிழமைகளில் வழிபடவேண்டும். புரட்டாசி சனிக்கிழமையும் ஏகாதசி திதியும் விசேஷமான நாள்களாகும். ஏலக்காய் மாலை அணிவித்து, நெய்தீபம் ஏற்றி வழிபட்டு, அன்னதானம் செய்தால், அளவற்ற நன்மைகள் உண்டாகும். இந்தப் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்வதன் மூலம் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். புத்திரப் பிராப்தியும் உண்டாகும். ஊமையைப் பேசவைத்த திருத்தலம் என்ற பெருமையும் இந்தக் கோயிலுக்கு உண்டு. இதேபோல் தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகில் உள்ள கோவிலூர் சென்னகேசவரையும் வழிபடலாம்.
எட்டுக்குடி சென்றால் ஏற்றம் கிட்டும்!
நெற்றிக்கண் திறப்பினும் குற்றமே எனும்படி நியாயத்தின் பக்கம் இருப்பவர்கள், இந்த ராசிக்காரர்கள்.விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்கள் இந்த ராசியில் அடங்குவார்கள். காலப் புருஷனின் 8வது ராசியில் இவர்கள் பிறந்து இருப்பதால், மன எழுச்சி அதிகம் உண்டு. அதைக் கட்டுப்படுத்த நாகை மாவட்டத்தில் உள்ள எட்டுக்குடி முருகனை வணங்கி வழிபடுவது அவசியம். 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் வான்மீகர் என்னும் சித்தரின் ஜீவ சமாதி அமைந்திருப்பதால், இங்கே வந்து வழிபடுபவர்களுக்கு மனச் சாந்தி உண்டாகும். செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இங்கே வந்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும். நெய்தீபம் ஏற்றி வழிபடுவதும், பால் காவடி எடுப்பதும் விசேஷமாகும். எட்டுக்குடி முருகன் கோயிலைப் போலவே, நாகப்பட்டினம் அருகில் உள்ள சிக்கல் சிங்காரவேலனையும் வணங்கிப் பலன் பெறலாம்.
மங்கலம் பெருக, மஞ்சள் காப்பு!
தனுசு ராசிக்கு அதிபதியாக குரு பகவான் வருகிறார். போராடும் குணமும், தொலைநோக்குச் சிந்தனையும் இந்த ராசிக்காரர்களுக்கு அதிகம் உண்டு. மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் ஆகிய நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்கள் இந்த ராசியில் அடங்குவார்கள். இந்த ராசியின் சின்னமாக வில்லும் அம்பும் அமைந்துள்ளது.
இந்த ராசி அன்பர்கள், திண்டுக்கல் அருகில் வேடசந்தூரில் கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு நரசிம்மரை வழிபடுவது, அளவற்ற நன்மைகளைத் தரும். இந்தத் தலத்தில் நரசிம்மர் தேவிபூதேவி சமேதராகக் காட்சி தருகிறார். இந்தக் கோயிலில் உள்ள வீர ஆஞ்சனேயருக்கு உகந்த ராசியாக இந்த ராசி உள்ளது. எனவே, இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் வீர ஆஞ்சனேயரையும் வழிபடலாம். இந்த ராசி அன்பர்களுக்கு ஏழரைச் சனி ஆரம்பித்து உள்ளதால், அடிக்கடி ஆயுளைப் பற்றிய அச்சம் ஏற்படக்கூடும். எனவே, அப்படிப்பட்ட நேரங்களில் இங்கு வந்து நரசிம்மரை வழிபட்டால், ஆயுளைப் பற்றிய அச்சம் நீங்குவதுடன் திருமணத் தடையும் விலகும்.
இந்த ஆலயத்தில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் வந்து வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். மஞ்சள் சார்த்தி வழிபட, மங்கலம் பெருகும்.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற இந்தக் கோயிலில் கார்த்திகை மாத பௌர்ணமி விசேஷமான தினமாகும். வேடசந்தூர் நரசிம்மர் கோயிலைப் போலவே, நாமக்கல் அருகில் உள்ள மோகனூரில் அமைந்திருக்கும் கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்குச் சென்றும் வழிபடலாம்.
புகழ் குன்றில் ஏற்றும் குணசீலம்!
மகர ராசிக்கு அதிபதி யாக சனிபகவான் அமைகிறார். அவரின் எதிர் கிரகமான செவ்வாய் இந்த ராசியில் உச்சமாகிறார். உத்திராடம் 2, 3, 4ம் பாதங்கள், திருவோணம் மற்றும் அவிட்டத்தின் முதல் இரு பாதங்கள் ஆகியன இதில் அடங்கும். பெருமாளின் நட்சத்திரம் இதில் வருகிறது. இந்த ராசிக்காரர்கள், திருச்சிசேலம் செல்லும் வழியில், காவிரிக் கரையில் உள்ள குணசீலம் தலத்தில் அருளும் பெருமாளை வழிபடுவது விசேஷம். திருவோண நட்சத்திர தினங்கள், வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் இந்தக் கோயிலுக்குச் சென்று துளசி மாலை அணிவித்து, பெருமாளை வழிபட்டு வரலாம்.
இந்த ராசியில் நெருப்பு கிரகம் செவ்வாய் உச்சமாகிறார். எனவே, உடல் உஷ்ணம் தொடர்பான குறைபாடுகள், எலும்புத் தேய்வு, தைராய்டு பிரச்னைகள், நரம்புப் பிரச்னைகள் ஏற்படக்கூடும். இவற்றையெல்லாம்  குணமாக்கும் வைத்தியராகத் திகழ்கிறார் இந்தத் தலத்தின் பெருமாள். இந்தக் கோயிலில் தரப்படும் தீர்த்தமானது வயிற்றுவலிக்கு அருமருந்தாகத் திகழ்கிறது. குணசீல முனிவர் தவம் புரிந்த சிறப்பும் இத்தலத்துக்கு உண்டு. இத்திருக்கோயிலில் உச்சிக்காலம் மற்றும் அர்த்தஜாம பூஜைகள் விசேஷமானவை.
இந்தத் தலம் மட்டுமின்றி, கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் அருள்பாலிக்கும்  அருள்மிகு வைகுண்ட நாராயண பெருமாளையும் இந்த ராசிக்காரர்கள் வழிபடலாம்.
திருப்பம் தரும் திருவேங்கடநாதபுரம்
கும்ப ராசி சனி பகவானின் ராசியாக உள்ளது. இதில் சனி முழு பலத்துடன் காணப்படுகிறார். பொறுமை இவர்களிடம் அதிகம் இருக்கும். வேலைக் காரர்களாக இருந்து, முதலாளியாக மாறும் தகுதி பெற்றவர்கள். அவிட்டம் 3, 4ம் பாதங்கள், சதயம், பூரட்டாதியின் முதல் மூன்று பாதங்கள் இதில் இடம்பெறுகின்றன. இந்த ராசிக்காரர்கள் நெல்லை மாவட்டம் திருவேங்கடநாதபுரத்தில் உள்ள பெருமாளை வணங்கி வழிபடுவது சிறப்பு.
புதன், வெள்ளி, சனிக்கிழமைகள் மற்றும் ஏகாதசி திதி நாட்களில் இந்த ஆலயத்துக்குச் சென்று மலர் மாலைகள் அணிவித்தும், நெய் தீபம் ஏற்றியும் பெருமாளை வழிபட்டு வரலாம். அத்துடன், பக்தர்களுக்கு தயிர்சாதம் வழங்குவது விசேஷம்! இங்குள்ள கருடாழ்வார் சங்குசக்கரத்துடன் காட்சி தருவது சிறப்பம்சம். அரிய வகை கல்வெட்டுகளும் இங்கு உள்ளன.
இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டால், நாக தோஷம் நீங்கும்; குழந்தை பாக்கியம் விருத்தியாகும்; வியாபாரம் செழிக்கும். பொருளாதார அந்தஸ்து தரக்கூடிய ஸ்தலமாகவும் இந்தத் திருத்தலம் விளங்குகிறது. மேலும், வேலூர் மாவட்டம், திருப்பாற்கடல் தலத்தில் அருளும் ரங்கநாதரையும் தாயாரையும் வழிபடலாம்.
கொல்லிமலை நந்திக்கு அருகம்புல் அர்ப்பணம்!
மீன ராசி குரு பகவானின் ராசி. குரு இந்த ராசியில் ஆட்சி பெற்றாலும், அவருடைய பகை கிரகமான சுக்கிரன் உச்சம் அடையும் ராசியாகும். அதனால், இவர்கள் வித்தியாசமாக சிந்திப்பவர்கள். இந்த ராசிக்காரர்கள் நாலும் தெரிந்தவர்களாகவும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் திகழ்வார்கள். பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி ஆகியன இதில் அடங்கும்.
இந்த ராசிக்காரர்கள், சேலம் மாவட்டம், கொல்லிமலையில் கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு அறப்பளீஸ்வரரை வழிபடலாம். இங்கே ஸ்வாமி சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். மீன ராசிக்காரர்கள் இந்த ஸ்வாமியை வழிபடுவதால், நல்ல பலன்களை அடையலாம். இங்கே அருளும் அறம்வளர்த்த நாயகியும் வரப்பிரசாதியானவள். முன் மண்டப விதானத்தில் அமைந்த அஷ்டலட்சுமியுடன் கூடிய ஸ்ரீசக்ர யந்திரம் இக்கோயிலின் விசேஷ அம்சம். இதன் கீழ் நின்று அம்மையப்பனை வழிபடுவதால், அதீத நன்மைகள் கிடைக்கும்; செல்வ வளம் பெருகும். திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்தத் தலத்துக்குச் சென்று தரிசிப்பதும், இங்குள்ள நந்தியெம்பெருமானுக்கு அருகம்புல் சமர்ப்பித்து வழிபடுவதும் விசேஷம்!
இந்தத் தலம் மட்டுமின்றி, மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் வழியில் உள்ள திருக்குருக்கையில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஞானாம்பிகை உடனுறை யோகீஸ்வரரை வழிபடுவதாலும் மேன்மை அடையலாம்

Thursday, March 10, 2016

தீராத பாவத்தையும் தீர்க்கும் மஹா சிவராத்திரி...

பாவம் செய்யாத மனிதர் என்று உலகில் யாரும் இல்லை. அறிந்தோ, அறியாமலோ அனுதினமும் பாவக்கணக்குகளை ஏற்றிக்கொண்டே போகிறோம். எறும்பு, ஈ, கொசு என எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் இறைவன். அவற்றிற்கு நம்மையும் அறியாமல் துன்பம் கொடுக்கும்போது, நம் பாவக்கணக்கும் சேர்ந்துவிடுகிறது. அவற்றைக் களைய இறைவன் நமக்கு பல வாய்ப்புகளையும் அளித்திருக்கிறார். புண்ணிய யாத்திரை, மகாமகம் நீராடல், கங்கோத்திரி, யமுனோத்ரி போன்ற தீர்த்த யாத்திரைகள் எல்லாம் அதற்கு உதவுவனதான். அதற்காக உயிரினங்களை துன்புறுத்திவிட்டு புனித நீராடலில் ஈடுபட்டால் பாவம் கழிந்துவிடும் என்று அர்த்தம் இல்லை. இவ்வுலகில் அனைத்து உயிர்களுக்கும் உயிர்வாழ உரிமை உண்டு என்ற புரிதலே அவசியம். இனியாவது பாவங்கள் செய்யக் கூடாது என்று சங்கல்பம் எடுப்பதும் முக்கியம். அப்படி, பாவக்கணக்குகளை எல்லாம் மூட்டைக் கட்டிவிட்டு, புண்ணியங்களைச் சேர்த்துக் கொள்ளும் அற்புதமான நாள்தான் சிவராத்திரி.

சிவராத்திரியின் சிறப்புகள் குறித்து மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோயிலின் அர்ச்சகரான மருதநாயக பட்டரிடம் கேட்டபோது, “சிவராத்திரிக்கும் மற்ற விழாக்க ளுக்கும் வித்தியாசங்கள் உண்டு. இறைவனின் அவதாரங்களை மையப்படுத்தி கிருஷ்ண ஜயந்தி, ராமநவமி, அனுமன் ஜயந்தி, விநாயகர் சதுர்த்தி, சங்கரர் ஜயந்தி என விழாக்கள் உள்ளன. ஆனால், சிவபெருமான் பிறப்புக்கும், இறப்புக்கும் அப்பாற் பட்டவர் என்பதால், அவருக்கு ஜயந்தி என்பது கிடையாது. 

மாசி மாதம், தேய்பிறை சதுர்த்தசிதான் (24-ம் நாள்) சிவராத்திரி. அனைத்துக்கும் ஆதாரமான சிவன், உயிர்களைப் படைத்ததும், ஒடுக்கியதும் (தனக்குள் ஐக்கியப் படுத்தியது) இந்த நாளில்தான். ‘லயக்ரம ஸ்ருஷ்டி தினம்’ என்கின்றன சாஸ்திரங்கள். ‘லயம்’ என்றால் ‘ஒடுக்குதல்’, ‘ஸ்ருஷ்டி’ என்றால் ‘படைத்தல்’. அதாவது, படைத்தலுக் கும், அழித்தலுக்கும் ஆதாரமான இறைவனுக்கான விழா இது. எந்த ஓர் உயிருக்கும் ஆணவ குணம் சிறிதேனும் இருக்கும். அதற்கு தேவாதி தேவர்களும் விலக்கல்ல. தங்களின் ஆணவ குணம் அடக்கப்பட, அவர்கள் சிவபெருமானை வணங்கும் நாள் சிவராத்திரிதான். அந்த நாளின், மூன்றாம் காலத்தில் சிவனாரை வழிபட்டால் எப்பேர்பட்ட பாவங்கள் செய்திருந்தாலும் விட்டு விலகிப் போகும். அதாவது, தன்னால் ஒதுக்கப்பட்ட, தான் ஏற்றுக்கொள்ளாத விஷயங்களைக் கூட சிவபெருமானார் அந்த நேரத்தில் ஏற்றுக்கொண்டு, மன்னித்து அருள்புரிவாராம். அந்த அளவிற்கு மகத்துவம் மிக்க நேரம் அது.
அல்லல் என்செயும் அருவினை என்செயும்

தொல்லை வல்வினைத் தொந்தம்தான் என்செயும்

தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்கு

எல்லை யில்லதோர் அடிமை பூண் டேனுக்கே.

- அப்பர் சுவாமிகள்
‘பஞ்சமா பாவங்கள்’ எனச் சொல்லப்படும் 5 பாவங்கள் கூட அச்சமயத்தில் மன்னிக்கப்படுமாம். அதாவது கொலை, கொள்ளை, பலாத்காரம், பொய் பேசுதல், ஏமாற்றுதல் ஆகிய பாவங்கள் மன்னிக்கப்படுமாம். எனவேதான், அந்நாளில் சிவாலயங்களுக்குச் சென்று இறைவனைத் தொழ நம் முன்னோர்கள் அறிவுறுத்தினர். அது, நிறைந்த புண்ணியத்தையும் நமக்குத் தரும். மூன்றாம் காலம் (நள்ளிரவு) என்பது தீட்டுக்களைக் கூட விலக்கி வைக்கும் நேரம். எனவேதான், சிவபூஜையில் பயன்படுத்தாத ‘தாழம்பூ’ அந்த ஒரு தருணத்தில் மட்டும் பூஜைக்கு எடுத்துக் கொள்ளப்படும். பூலோக உயிர்கள் மட்டுமின்றி தேவர்கள், கிங்கரர்கள், பூதகணங்கள் சுவாமியை ஆராதிக்கும் தினமும் அதுதான்” என சிவராத்திரி வழிபாட்டுக்கான ஐதீகங்களை ஒவ்வொன்றாக விவரித்தார் மருதநாயக பட்டர்.
மேலும், “இந்த தினம் குற்றங்களைப் போக்கும் தினம் என்பதால், சிவனைச் சரணடைந்து, அடுத்த பிறப்பு என ஒன்று வேண்டாம். இந்தப் பிறப்போடு மோட்சகதி பெற வேண்டும் என்கிற வேண்டுதலை முன்வைத்து வணங்க வேண்டும்”
என சிவராத்திரிக்கான பிரார்த்தனை நியதியையும் விவரித்தார்.

சிவராத்திரி கொண்டாட்டத்தின் பின்னணி யில்  பல கதைகள் சொல்லப்படுகிறது. வில்வ மரத்தின் மேல் இருந்த குரங்கு ஒன்று, ஒரு சந்தர்ப்பத்தில் மரத்தில் இருந்த இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்து கீழே வீசியது. ஓர் இரவு முழுதும் அது அவ்வாறு செய்தது. யதார்த்தமாக, அந்த இலை கீழேயிருந்த சிவன் மீது விழ, அதுவே அவருக்கு அர்ச்சனையானது. அதனால், அகமகிழ்ந்த சிவனார், அவரை அடுத்த பிறப்பில் சக்கரவர்த்தியாக அவதரிக்கச் செய்தார். அவரே, முசுகுந்தச் சக்கர வர்த்தி. மன்னரான பின்னும், சிவ பக்தனாக இருந்து, இந்திரன் பூஜித்த விடங்க லிங்கத்தைப் பெற்று சிவனின் அருள் பெற்றார். குரங்கு வடிவில் இருந்த மன்னன் வரலாறு, கயிலாயத்தில் நடந்ததாகவும், காட்டில் வேடன் ஒருவனிடமிருந்து தப்பி காட்டில் இருந்தபோது இவ்வாறு செய்ததாகவும் இரு வேறு புராணங்கள் சொல்லப்படுகின்றன.

திருவண்ணாமலையின் தல வரலாறு, அடிமுடி காண முடியாத படி உயர்ந்த சிவன், ‘லிங்கோத்பவர்’ வடிவம் எடுத்து பக்தர்களை உணர வைத்த நாள் சிவராத்திரி என்கிறது. இதுகுறித்து விளக்கமளித்த மருதநாயக பட்டர், “சிவராத்திரியை ‘லிங்கோத்பவ காலம்’ என்றும் சொல்வர். ‘மகாநிசி காலம்’ (நள்ளிரவுக்கு முன்னும், பின்னுமான 5 நிமிடங்கள். அதாவது, நள்ளிரவு 11.55 - 12.05 வரை) என்று சாஸ்திரங்கள் சொல்லும் நள்ளிரவு நேரத்தில், சிவனை வழிபடுவது பல நன்மைகளைத் தரும். சிவராத்திரி, நான்கு காலங்களிலும் 4 விதமான அபிஷேகங்கள் சிவனாருக்குச் செய்யப்படும். முதல் கால பூஜையில் பஞ்சகவ்யம்; இரண்டாம் காலத்தில் பால், பஞ்சாமிர்தம்; மூன்றாம் காலத்தில் பழச்சாறுகள், நான்காம் காலத்தில் சந்தன அபிஷேகம் செய்வது விசேஷம்.

பொதுவாக, சிவபெருமானுக்கு உகந்தது வெண்ணிற ஆடைதான். ஆனால், நான்கு கால பூஜையின்போது மட்டும் நான்குவிதமான ஆடை களை சிவனுக்கு அணிவித்து அலங்கரிக்க வேண் டும். முதல் காலத்தில் சிவப்பு, 2-ம் காலத்தில் மஞ்சள், 3-ம் காலத்தில் வெள்ளை, 4-ம் காலத்தில் பழுப்பு நிற ஆடை அணிவிக்கலாம்” என்றார்.
மேலும் தொடர்ந்தவர், “அந்த நாளில் எல்லா சிவாலயங்களிலும் உள்ள சிவபெருமானை வழிபடுவது புண்ணியத்தைத் தரும். ஆனாலும், சிவராத்திரியின் மகிமையால் உண்டான சப்தவிடங்கத் தலங்கள், பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள், பஞ்ச சபைகள், பஞ்சபூத தலங்கள், பஞ்ச ஆரண்ய தலங்களுக்குச் சென்று வழிபடுவது விசேஷம். முடிந்தவரையில் வில்வ இலைகளால் சிவனாரை அர்ச்சனை செய்ய வேண்டும். வில்வ அர்ச்சனை அவருக்கு உகந்தது என்பதால், அதனையே பிரசாதமாகப் பெற்றுச் சென்று வீட்டில் வைத்தால் ‘சுபிட்சம்’ உண்டாகும். அந்நாளில் முழு இரவும் கண் விழித்திருந்து, சிவனாரை மனதில் தியானிக்க வேண்டும். தேவாரம், திருவாசகப் பதிகங்களை  பாராயணம் செய்து அவரை வழிபட வேண்டும். மறுநாள் காலையிலும் கண் விழித்திருந்து, மாலை 6 மணிக்கு மேல் உறங்கச் செல்லலாம். முடியாதவர்கள், மதிய உணவுக்குப் பிறகு உறங்கிக் கொள்ள சாஸ்திரம் அனுமதிக்கிறது” என்று விவரித்தார்.

சிவனருளைப் பெற ஆண்டிற்கு ஒருநாள் வரும் மஹாசிவராத்திரியன்று சிவபெருமானை மனதில் நினைத்துத் தொழுவோம். தீராத பாவங்களும் பிணிகளும் தீர்ந்து, அவரின் பரிபூரண அருள் பெற்று வாழ்வில் உய்வோம்.

Sunday, March 6, 2016

மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?

மாசி மாதம், 24-ம் நாள் வரும் தேய்பிறை சதுர்த்தசிதான் (மார்ச்-7) மகா சிவராத்திரி. எந்த ஓர் உயிருக்கும் ஆணவ குணம் சிறிதேனும் இருக்கும். அதற்கு தேவாதி தேவர்களும் விலக்கல்ல. தங்களின் ஆணவ குணம் அடக்கப்பட, அவர்கள் சிவபெருமானை வணங்கும் நாள் சிவராத்திரிதான்.
அந்த நாளின் மூன்றாம் காலத்தில் சிவனாரை வழிபட்டால் எப்பேர்பட்ட பாவங்கள் செய்திருந்தாலும் விட்டுவிலகிப் போகும். அதாவது, தன்னால் ஒதுக்கப்பட்ட, தான் ஏற்றுக்கொள்ளாத விஷயங்களைக்கூட சிவபெருமானார் அந்த நேரத்தில் ஏற்றுக்கொண்டு, மன்னித்து அருள்புரிவாராம். அந்த அளவிற்கு மகத்துவம் மிக்க நேரம் அது. சரி, அன்றைய தினத்தில் என்ன செய்ய வேண்டும்?

சிவராத்திரிக்கு முதல் நாளன்று ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்கள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். மறு நாள் சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதிக்கும்போது காலையில் செய்ய வேண்டிய அனுஷ்டானங்களை (பூஜைகள் போன்றவற்றை) செய்தபின், சிவன் கோயிலுக்குச் சென்று முறைப்படி தரிசனம் செய்து திரும்ப வேண்டும்.
கோயிலுக்குள் கொடிமரத்தைத் தவிர வேறு எந்த சந்நிதியிலும் விழுந்து நமஸ்காரம் செய்யக் கூடாது. அதேபோல் எந்தச் சந்நிதியிலும் அப்பிரதட்சிணமாக வலம் வரக் கூடாது. ஸ்வாமிக்கும் அவர் முன்னால் உள்ள வாகனத்துக்கும் நடுவே போகக் கூடாது. நம் ஆடையில் இருந்து நூலை எடுத்து சண்டிகேஸ்வரர் மீது போடக் கூடாது. ஆண்கள், தலைக்கு மேல் கை கூப்பி ஸ்வாமியை வணங்க வேண்டும். பெண்கள், நெஞ்சுக்கு நேராகக் கைகளை வைத்து வழிபட வேண்டும்.

வீட்டில் பூஜை செய்யும் முறை...

முறைப்படி தரிசனம் முடித்து வீட்டுக்கு வந்தவுடன், சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்து, மாலை, தோரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும். அதன் பின் நடுப்பகலில் நீராடி, உச்சி கால அனுஷ்டானங்களை முடித்துவிட்டு சிவபூஜைக்கு உரிய பொருட்களைச் சேகரித்து, சூரியன் மறையும் வேளையில் சிவராத்திரி பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

முதல் ஜாமத்தில் (மாலை 6 முதல் 9 மணி வரை):
ஸ்வாமிக்குப் பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். பசும் பால், பசுந் தயிர், பசு நெய், பசுவின் சிறுநீர், பசுஞ்சாணம்- இந்த ஐந்தும் கலந்தது, பஞ்சகவ்யம் (அளவு-1:2:3:1:1). அகில் குழம்பும், வில்வமும் சாற்ற வேண்டும். தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். பயத்தம் பருப்பு கலந்த பொங்கலை நைவேத்தியம் செய்து, ரிக் வேதம் சொல்ல வேண்டும்.

இரண்டாம் ஜாமத்தில் (இரவு 9 முதல் 12 மணி வரை): பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும். தேன், சர்க்கரை, தயிர், பால், நெய் ஆகிய ஐந்தும் கலந்தது பஞ்சாமிர்தம். இதில் தயிரை நீக்கி வாழைப்பழத்தைச் சேர்ப்பதும் உண்டு. சந்தனமும், தாமரைப் பூவும் சாற்ற வேண்டும். துளசியால் அர்ச்சனை செய்து பாயசம் நைவேத்தியம் செய்து, யஜுர் வேதம் சொல்ல வேண்டும்.

மூன்றாம் ஜாமத்தில் (இரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரை): தேன் அபிஷேகம் செய்ய வேண்டும். அரைத்த பச்சைக் கற்பூரம், ஜாதி முல்லை மலர் சாற்ற வேண்டும். மூன்று இலைகள் கொண்ட வில்வத்தால் அர்ச்சனை செய்து, எள் சாதம் நைவேத்தியம் செய்து, சாம வேதம் சொல்ல வேண்டும்.

நான்காம் ஜாமத்தில் (அதிகாலை 3 முதல் 6 மணி வரை): கரும்புச் சாறினால் அபிஷேகம் செய்து, அரைத்த குங்குமப் பூவுடன் நந்தியாவட்டை மலர் சாற்ற வேண்டும். நீலோத்பல மலரால் அர்ச்சனை செய்து சுத்தமான அன்னத்தை நைவேத்தியம் செய்து, அதர்வண வேதம் சொல்ல வேண்டும். 

அதன்பின் மறு நாள் அதிகாலையில் நீராடி, காலை அனுஷ்டானங்களுடன் உச்சி கால அனுஷ்டானத்தையும் சேர்த்து முடித்துவிட்டு நமக்கு உபதேசம் செய்த தீட்சை குருவை வணங்கி, அவர் ஆசி பெற்று, ஒரு சில ஏழைகளுக்காவது உணவளித்து, அதன் பின் நாம் உண்ண வேண்டும். இவ்வளவையும் சூரியன் உதித்து இரண்டரை மணி நேரத்துக்குள் செய்ய வேண்டும்.

சிவராத்திரி அன்று வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள்...

கோயில்களில் நடக்கும் பூஜைகளில் கலந்து கொள்ளலாம். சிவராத்திரி (வைகுண்ட ஏகாதசியும்தான்) அன்று கண் விழிக்க வேண்டும் என்பதற்காக, தாயக்கட்டம் ஆடுவதோ, திரைப்படங்கள் பார்ப்பதோ தவறு. தேவாரம், திருவாசகம், சிவபுராணம், சிவ ஸ்தோத்திரங்கள் முதலானவற்றைப் படிப்பதோ அல்லது யாரையாவது படிக்கச் சொல்லி, கேட்கவோ வேண் டும்.
சிவராத்திரி அன்று இரவு முழுவதும் ‘சிவபுராண’ உபன்யாசம், ஒரு சில கோயில்களில் நடைபெறுகிறது. அதைக் கேட்கலாம்; அமைதியாக சிவ மந்திரங்களை சொல்லி தியானிக்கலாம்.