Saturday, June 13, 2015

The secrets behind Chidambaram Nataraja Temple

Chidambaram
 
Lord Shiva dances here in Chidambaram. Before we speak of the Dance , we will explore the stage that is Chidambaram.
 
A temple is called ‘Kovil’ in Tamil. It literally means( Ko- il) the abode of the Lord. Whenever the mere name ‘kovil’ is mentioned, it specially means Chidambaram which is split as
  •                    Chit( gnana or wisdom) +
  •                    Ambaram ( akasa or space) .
 
Structure of a typical Siva Temple
 
A classical Siva temple as per Agama rules will have five prakaras or circuits each separated by walls one within the other. The outer prakaras will be open to the sky except the innermost one. The innermost one will house the main deity as well as other deities. There will be a massive wooden or stone flag post exactly in line with the main deity.
 
The innermost prakara houses the sanctum sanctorum ( karuvarai in Tamil). In it sits Shiva, the supreme Lord.
 
Symbolism behind the structure of a Shiva Temple
1. The temple is so constructed as to resemble the human body with all its subtleties.

2. The five walls encircling one another are the kosas ( sheaths) of human existence .

           a. The outermost is the Annamaya kosa , symbolizing the material body.

           b. The second is Pranamaya kosa , symbolizing the sheath of vital force or prana.

           c. The third is Manomaya kosa, symbolizing the sheath of the thoughts, the mana

           d. The fouth is the Vignyana maya kosa, symbolizing, the sheath of the intellect

           e. The fifth and innermost is the Ananda maya kosa, symbolizing the sheath of Bliss.


3. The sanctum which is in the prakara symbolizing the Ananda Maya Kosa sheath ,

houses the lord, seated as the Jiva within us. It is to be noted that the sanctum is an

unlit space, just as if within the heart closed on all sides.

4. The entry Gopuras are likened to the feet, as resembling a person who is lying on the

back with the toe up.

5. The flag post depicts the sushumna nadi which raises from the Mooladhar (base of the

spine ) to the sahasrar ( vertex in the head).

6. Some temples will have three prakarams. There they represent the stoola, sukshma

and karana sareeras (bodies) of a human being Some temples have only one and they

represent all the five.
 
திருமந்திரம்

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
 
Meaning:
“Sivalingam is of the form of the human body;
  So is Chidambaram ;
  So is Sadasivam ; And
  so is his divine dance”.
 
 

1. The temple has the above five prakaras resembling the sheaths.

2. Nataraja gives dharshan from the sanctum called Chit Sabha with a golden roof.
3. The roof has 26,000 golden tiles (see picture), denoting the number of breaths of a person in a day.
 
4. These tiles are fixed to the wooden roof with the help of 72,000 nails depicting the number of nadis (the invisible ducts carrying energy to various parts of the body)
5. As the heart is to the left of the body, the sanctum in Chidambaram is also aligned slightly leftward.
6. On top of the Chit sabha roof, we find nine kalasas (made of copper) depicting the nine shaktis (powers)
7. The roof has 64 cross wooden reapers denoting the 64 arts.
8. The artha mandapa has six pillars denoting the six shastras
9. The mantapa next to the artha mantapa has eighteen pillars symbolizing the eighteen puranas.
10. There are five steps leading to the Chit sabha from the Kanaka sabha depicting the five lettered Panchakshara mantra ( Na ma chi vA ya)
11. The Chit sabha roof is supported by four pillars symbolic of the four Vedas.
 
Symbolism of Nataraja Swamy
 
 
 
1. Nataraja’s dance is said to indicate the five divine acts which are

        a. Creation . Nataraja dances with a small drum called damarukam in one of his
            right hands. Easwra is nada brahmam. He is the origin of all sounds (nadam).This is
            the seed (vindu) from which the tree of the Universe emanated.

       b. Protection (Operation)- In another of the right hands, he shows the ‘Abhaya
          Mudra’, meaning he is the kind protector .

      c. Destruction; He has fire in one of his left hands , symbolizing destruction.
         When everything is destroyed by fire, only the ash will remain which the Lord has
         smeared on his body.

       d. The foot which is planted shows the act of hiding

       e. The raised foot shows the act of bestowing

2. Nataraja swamy has the Vigraha ( icon) of Devi Sivakama Sundari to his left . This symbolizes Ardhanareeswara , ‘ the Lord who has the female as his left half’. To his right there is a screen. When the deeparadhana – showing lamps takes place to the swamy and to the left side , the screen is removed and we see five vertical long hangings of golden vilva leaves. We see nothing behind it. Sivakami shows the Saguna Brahman (the God with a form) that is Nataraja . The Saguna Brahman leads us to the Nirguna Brahman (the God without form or the God who has formlessness as his form). This is told as ‘Chidambara Rahasyam’ by the Dikshitars , who are the traditional pujaris in the temple.

3. Shiva’s dance is called the cosmic dance by many scholars. In Chidambaram, this dance is called ‘Ananda Tandava’

4. Lord Maha Vishnu also saw the Divine dance. In a nearby mantapa called Chitrakoota, Maha Vishnu, gives us dharshan in his fully reclining Yoga Nidra pose on the snake bed. If one stands on a small lotus sculpted on the floor slab in front of Narayana, one can at the same time see Nataraja in his right side.

5. Sages Patanjali and Thirumoolar also saw Nataraja’s dance in Chidambaram. Their figures are embossed on the Silver doors of the Chit Sabha.
 
 

Temple 18 - Chidambaram - Natarajaar Temple (The Temple for SPACE )

 சிதம்பரம் கோவில் சுற்றுப்புற கட்டிடங்கள் 1000 வருடம் பழமையானவை. கோவிலின் புராதன உட்புறம் எவ்வளவு காலத்திற்கு முந்தையது என்று யாருக்கும் தெரியாது. 5000 ஆண்டுகளுக்கு முந்தையதாக அதற்கும் முற்பட்டதாக இருக்கலாம். இப்படியாகத்தான் இந்நாட்டின்(India) கலாச்சாரம் இருந்திருக்கிறது.


ராமேஸ்வரம் கோவிலோ, சிதம்பரம் கோவிலோ, மதுரை கோவிலோ இவையெல்லாம் ஆயிரமாயிரம் வருடங்கள் பழைமையானதாகும். பிரம்மாண்டமான கட்டிடங்கள் உடையதாகும்.

இத்தகைய கோவில் கட்டப்படுகின்ற காலத்தில் அரசனைத் தவிர ஏனையோர் இப்பணி நிமித்தம் கூடாரங்களிலேயே தங்கியிருந்தனர். எந்திரங்களோ, வாகனங்களோ, பளு தூக்கும் சாதனங்களோ இல்லாமல் இரண்டு தலைமுறைக்கான காலமாக ஒரே குறிக்கோளை மனதில் கொண்டு மனிதர்களால் இக்கோவில்கள் உருவாக்கப்பட்டன.

கோவில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்கள் இதற்காகவே தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தனர். ஏனெனில் இக்காரியமே அவர்கள் வாழ்வின் நோக்கமாக இருந்தது.

CERN ஆராய்ச்சிக் கூடத்தில் நடராஜர்!



சிதம்பரம் கோவிலில் நடனக் கலையின் அரசனான சிவன் 'நடராஜன்' என்ற சிலை வடிவில் இருக்கின்றான். நான் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சென்றிருந்தபோது CERN என்ற பௌதீக ஆராய்ச்சிக் கூடத்திற்குப் போனேன். அணுவைப் பிளந்து மேற்கொள்ளும் ஆராய்ச்சி உலகிலேயே அங்குதான் நடைபெறுகின்றது. அந்த பரிசோதனைச் சாலையின் வாயிலில் நடராஜரின் சிலைவடிவம் வைக்கப்பட்டிருந்தது. ஏனெனில் அணுக்கூறுகளின் இயக்கங்களை ஒத்திருக்கும் மனித கலாச்சார விஷயத்தில் நடராஜரின் நடன வடிவமே அதற்குப் பொருந்தியுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுள்ளனர்.


நடராஜரின் வடிவம் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து வந்த ஒன்றாகும். இவ்வடிவம் படைப்பின் தொடக்கத்தை பரவெளியிலிருந்து ஒரு நாட்டியம் போல தன்னெழுச்சியாக வெடித்துக் கிளம்பிய விதத்தைக் குறிப்பதாகும். சிதம்பரம் என்பது அசைவற்ற முடிவில்லாத நிலையைக் குறிக்கும் என்பதால் அக்கோவிலில் நடராஜர் நிற்பது போன்ற வடிவம் அமைந்துள்ளது. அந்நிலைதான் கோவிலின் கருவறையிலும் குடிகொண்டுள்ளது. மனிதனுள் பொதிந்துள்ள இந்த அசைவற்ற தன்மை, நுண்கலை வடிவமாகவும் வெளிப்படுகிறது. இத்தன்மையில்லாமல் உண்மையான கலைவடிவு கிடையாது. நடராஜமூர்த்தி ஒருபுறம் இருக்க கருவறையின் மூலவர் என்பது இங்கு எல்லையில்லாத வடிவமில்லாத பரவெளியே ஆகும்.

பதஞ்சலி முனிவர் உருவாக்கிய கோவில்


பதஞ்சலி முனிவர்தான் இக்கோவிலை உருவாக்கினார். நவீன யோகக் கலையின் தந்தையாக பதஞ்சலி அறியப்படுகிறார். அவர் கண்டுபிடித்ததல்ல யோகா. மாறாக ஏற்கெனவே பல்வேறு நிலைகளில் இருந்த யோக முறைகளை அவர் ஒரு தொகுப்பாக முறைப்படுத்தினார். யோக சூத்திரங்களும் அவரால்தான் எழுதப்பட்டன.

பதஞ்சலி முனிவர் ஒரு குறிப்பிட்ட கட்டிட விஞ்ஞான (ஆகம) முறைப்படி சிதம்பரம் கோவிலைக் கட்டினார். அவர் வெறும் பக்தரல்லர். யோக விஞ்ஞானியுமாவார். எனவே அந்தக் கோவிலின் அன்றாடப் பணிகள், பூஜைகள் எப்படி நடைபெற வேண்டும் என்றும் சொல்லி வைத்துள்ளார். இதற்காக ஒரு குழுவுக்கு பயிற்சி அளித்து அந்தக் கோவிலை எப்படி ஒழுங்காக பராமரிக்க வேண்டும், அங்கு எத்தகைய சடங்குகள் செய்ய வேண்டும் என்பது பற்றியும் சொல்லிச் சென்றுள்ளார். அக்குழு பல குடும்பங்களாக பெருகி இன்றும் கோவிலை நிர்வாகம் செய்து வருகின்றது. பதஞ்சலி சொன்ன நடைமுறைகள் அவர்களால் இன்றும் கடைப்பிடிக்கப் படுகின்றன.
சிதம்பரம் கோவிலின் கட்டிடங்கள் சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. அவை முற்றிலும் கற்களால் ஆனவை. இது தவிர நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கோவிலைச் சார்ந்தவை. ஏராளமான ஆபரணங்களும், நவரத்தின மணிகளும் இருந்தன

இக்கோவிலை பதஞ்சலி முனிவர் உருவாக்கும்போது எந்த ஆடம்பர நோக்கத்துடனும் செய்யவில்லை. ஒரு மகத்தான சக்தியூட்டப்பட்ட புனித ஸ்தலத்தை உருவாக்க என்ன தேவையோ அதை மட்டுமே செய்தார். அந்த இடம் உரிய முறையில் பாதுகாக்கப்பட்டு அதே புனிதத் தன்மையுடன் தொடர்ந்து மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார்.


Nataraja – The Lord of Dance

At the Chidambaram temple, there is the Nataraja, Shiva as the Lord of Dance. Natesha or Nataraja is one of the most significant forms of Shiva. When I visited CERN in Switzerland, which is the physics laboratory on the planet, where all the atom-smashing takes place, I saw that there is a Nataraja statue in front of the entrance, because they identified that there is nothing in human culture which is closer to what they are doing right now.
 
The Nataraja form essentially comes from Southern India, particularly from Tamil Nadu. It represents the exuberance of creation, the dance of creation which self-created itself from the eternal stillness. Nataraja standing in Chidambaram is very symbolic because what you call as Chidambaram is just absolute stillness. That is what is enshrined in the form of this temple. The classical arts are to bring this absolute stillness into a human being. Without stillness, true art cannot come.
 

Space

One thing about Chidambaram is the Nataraja, but the main deity is an empty space. This temple was consecrated by Patanjali himself. Patanjali is known as the “Father of Modern Yoga.” He did not invent yoga. Yoga was already there in various forms which he assimilated into a system. The Yoga Sutras were written by him. If you look at Patanjali, as an enlightened being he can’t be more enlightened than someone else. There is no such thing. Realization is realization. But Patanjali as a man and above all as an intellect, the breadth of his understanding of life is so big that you cannot believe that this is possible in one human being. He is absolutely incredible and almost “not human.”

Painting depicting Nataraja at Chidambaram. Lt of Nataraja – Parvati, Rt – Vyagrahapada, Patanjali
Patanjali consecrated this temple with a certain science behind the whole thing because he is not a devotee, he is a scientist and he set up proper ways of how to conduct the temple. He prepared a group of people who have to maintain a certain level of sadhana and discipline and a method of daily ritual in the temple. Those families multiplied and they continued to keep the temple. Even today, they are generally maintaining the codes and the ritual part that he set forth as to how the temple should be maintained.
 

Arudra Darshan

One well-known aspect at Chidambaram is the Arudra Darshan in the Tamil month of Margazhi. Rudra means a roarer, or someone who is very effervescent – more than effervescent, a roar. Arudra means stable; not the roaring kind but absolutely stable. Rudra also suggests movement and creation. Arudra suggests a certain inertia.
 
 

Friday, June 12, 2015

Temple 17 : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் - Kanchipuram Ekambareswarar Temple(Temple for EARTH)

ஏகாம்பரேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோவிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில், 600ஆம் ஆண்டே கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 


இங்கு உள்ள சிவபெருமானை பிருத்வி லிங்கம் என்று அழைப்பர். மேலும் இந்த சிவபெருமான் மண்ணால் ஆனவர். இதனை சுயம்பு என்றும் கூறுவது உண்டு. அதனால் இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் இங்கு மற்ற கோவில்களைப் போல அம்மனுக்கு என்று தனியாக சந்நிதி கிடையாது. 




மற்ற கோவில்களைப் போல் விநாயகர், முருகன், போன்ற கடவுள்களும் இங்கு காட்சி தருகின்றனர்.  முதல் பிரகாரத்தின் ஈசான மூலையில் நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி அமைந்த்துள்ளது. மேலும் இந்தக் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.


வரலாறு:
முதன் முதலில் பல்லவர்களே இந்தக் கோயிலை கட்டியுள்ளனர் என்பதற்கு சான்றாக பல்லவர் கால சிற்பங்களும் கல்வெட்டுகளும் இங்கு உள்ளன. பின்னர் சோழர்களால் புணரமைக்கப்பட்டு கோவில் வளர்ச்சியடைந்தது.  மேலும் அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தலம் இது. பழங்கால சமயம் சார்ந்த நூல்களில் இந்தக் கோவில் திருக்கச்சிஏகம்பம் என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டு வந்தது. 


இந்தக் கோவிலின் கிழக்கு கோபுரமான இராஜ கோபுரம், 58.5 மீட்டர் உயரமும் ஒன்பது அடுக்குகளையும் கொண்டது. இதனை விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் கி.பி 1509 ஆம் ஆண்டு கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் இக்கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தையும் கிருஷ்ணதேவராயரே கட்டியுள்ளார்.  இந்தக் கோவிலில் மொத்தம் ஐந்து பிரகாரங்கள் உள்ளன. 


ஸ்தலவிருட்சம்: 
ஒவ்வொரு கோவிலுக்கு ஸ்தலவிருட்சம் என்று ஒரு மரம் உண்டு, அந்த வகையில் இந்தக் கோவிலில் ஸ்தலவிருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம். இந்த மாமரத்தில் நான்கு கிளைகள் உள்ளன. வெவ்வேறு காலங்களில் இந்த மாமரத்தில் உள்ள நான்கு கிளைகளில் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாகும் என்பது இதன் சிறப்பு. இந்த நான்கு கிளைகளும் ரிக், யஜுர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களை குறிக்கின்றன. 


தலவரலாறு: 
பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது. சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து உலகத்துக்கு வெளிச்சம் தந்தார். இந்த தவற்றினால் பார்வதியை உலகத்துக்குச் சென்று தன்னை நோக்கி தவம் இருக்கச் சொன்னார் சிவபெருமான். பார்வதியும் காஞ்சிபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணல் லிங்கம் செய்து பூஜித்தார். பார்வதியின் தவத்தை உலகினுக்கு அறியச் செய்ய சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளத்தை உண்டாக்கினார். பார்வதி தனது மணல் லிங்கத்தை வெள்ளம் அடித்து செல்லாமல் இருக்க கட்டி அணைத்துக் கொண்டார். உடனே சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்று பார்வதிக்கு அருள் புரிந்து, இரண்டு படி நெல்லைக் கொடுத்து காமாட்சி என்ற பெயரில் காமகோட்டத்தில் 32 அறங்களைச் செய்ய பணித்தார். பார்வதி வழிபட்ட மணல் லிங்கம் தான் பிரித்வி லிங்கம், அந்த மாமரம் தான் ஸ்தல விருட்சம். காமகோட்டம் தான் காமாட்சி அம்மன் கோவில்.  பார்வதி கட்டித் தழுவியதால் இங்கு உள்ள சிவபெருமானை தழுவக் குழைந்தார் என்றும் அழைப்பர். 


சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலி நாச்சியாரை மணந்த போது "உன்னைப் பிரியேன்" என்று சிவனை சாட்சியாக வைத்து சத்தியம் செய்தார். அந்த சத்தியத்தை மீறியதால் அவர் கண் பார்வை இழந்தார். இழந்த பார்வையில் இடக்கண் பார்வையை சுந்தரர் இங்கு பதிகம் பாடி பெற்றதாக வரலாறு உண்டு. 


விழாக்கள்: 
இந்தக் கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் ஆனித் திருமஞ்சனம், ஆடிக் கிருத்திகை,  ஆவணி மூலம், நவராத்திரி, பங்குனி உத்திரம், சித்ரா பெளர்ணமி, வைகாசி விசாகம் போன்ற விழாக்களும் நடைபெறுகின்றன. 


கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.


எப்படி செல்வது:
1) காஞ்சிபுரம் சென்னைக்கு அருகில் உள்ளதால், சென்னை மற்றும் தமிழக்த்தின் பல பகுதிகளில் இருந்து பேருந்து வசதி உள்ளது.


2)காஞ்சிபுரத்திற்கு சென்னை, திருப்பதி, அரக்கோணம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் இருந்து பயணிகள் ரயில் இயக்கப்படுகின்றன. 


3)அருகில் உள்ள விமான நிலையம் - சென்னை 56 கி.மீ தொலைவில்.
.

பஞ்சபூத ஸ்தலங்கள்!!!(Pancha Butha Sthalas)

பஞ்சபூத ஸ்தலங்கள்!
நீர், நிலம், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களின் அடிப்படையில் தென்னிந்தியாவில் ஐந்து கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இவைகள் பஞ்சபூத ஸ்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

In South India, FIVE Temples were built for FIVE Elements. Air, Fire, Space , Earth and Water.
 

பூகோளரீதியாக அவைகள் (தக்காண பீடபூமியில்) தமிழகத்தில் நான்கும் ஆந்திரப் பிரதேசத்தில் ஒன்றுமாக அமைந்துள்ளன.

  • நீருக்காக திருவானைக்காவல்,  (Temple for WATER)
  • நெருப்புக்காக திருவண்ணாமலை, (Temple for Fire)
  • காற்றுக்காக காளஹஸ்தி, (Temple for AIR)
  • ஆகாயத்திற்காக சிதம்பரம், (Temple for SPACE)
  • பூமிக்காக காஞ்சிபுரம் (Temple for EARTH)

ஆகிய இடங்களில் கோவில்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

Here's the map for FIVE Temples.
 

Sunday, June 7, 2015

எந்தவகை யோகாவை செய்வது நல்லது? - HATHA YOGA

கேள்வி: யோகப் பயிற்சிகள் செய்வதால் உள்நிலையில் ஒரு நல்ல மாற்றம் தெரிகிறது. ஆனால் யோகாவை

  • ஷ்டாங்க யோகா,
  • ஹடயோகா,
  • ராஜயோகா  
என்று பலவிதமான பிரிவுகளாக பலரும் சொல்லித் தருகிறார்கள். மதங்கள் போலவே யோகாவிலும் இத்தகைய பிரிவுகள் இருக்கிறதா? இவை எல்லாம் ஒன்றே தானா, வெவ்வேறா? எனக்குக் குழப்பமாக இருக்கிறது.

சத்குரு: யோகா - ஹதயோகா


யோகா என்றால் 'சங்கமம்'. உலகில் உள்ள எல்லாவற்றுடனும் உணர்வளவில் ஒன்றாக நீங்கள் உணர்ந்தால், அதுதான் யோகா. இந்த நிலையை நீங்கள் அடைய பலவழிகள் உண்டு. நீங்கள் சொல்லும் அனைத்துமே அதில் அடக்கம். இதில் ஹதயோகா என்பது உடலில் இருந்து ஆரம்பிப்பது. உடலுக்கென்று தனி கட்டுப்பாடுகளும், அகங்காரமும் உண்டு. மனதிற்கு மட்டும் தான் அகங்காரம் என்றெண்ண வேண்டாம். உடலுக்கென்றும் தனியாக அகங்காரம் இருக்கிறது. அதற்கென்று சில கட்டுப்பாடுகளும் உண்டு. அதற்குக் கட்டுப்பட்டுத் தான் இன்று நீங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.



உதாரணத்திற்கு நாளையிலிருந்து காலை 5 மணிக்கு எழுந்து கடற்கரையில் நடப்பேன் என்று அலாரம் வைக்கிறீர்கள். அலாரம் அடிக்கிறது. நீங்கள் எழ முயற்சிக்கிறீர்கள். ஆனால் உடல் என்ன சொல்கிறது? “பேசாமல் தூங்கு” என்றுதானே? இது நடக்கிறதா, இல்லையா? எனவே பயிற்சியை முதலில் உடலிலிருந்து துவங்குகிறோம்.  ஹதயோகப் பயிற்சிகள் உடலை தூய்மையாக்கி, அதை மேல்நிலை சக்திகளுக்குத் தயார் செய்கிறது. நாம் எல்லோரும் மனிதர்கள் தான்.  உயிரோடு தான் இருக்கிறோம். ஆனால் நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையை வெவ்வேறு அளவில், வெவ்வேறு தீவிரத்தில் உணர்கிறோம். இதற்குக் காரணம் நம் சக்திநிலைகள் வெவ்வேறு அளவிலான தீவிரத்தில் இருப்பது தான்.
 
சிலருக்கு நீண்டு வளர்ந்த மரம், கண்ணில் படுவது கூட இல்லை. சிலருக்கு அது 'ஒரு மரம்' என்ற அளவில் தெரிகிறது. சிலர் அதை இன்னும் கூர்ந்து கவனிக்கிறார்கள். ஒரு ஓவியருக்கு, அந்த மரத்தின் இலைகளில் தென்படும் வெவ்வேறு பச்சை வண்ணங்கள் மனதை மயக்குகிறது. இன்னும் வேறு சிலருக்கோ, மரம் என்பதை தாண்டி, அதில் பிரதிபலிக்கும் இறைத்தன்மை அவர்களை ஆட்கொள்கிறது. ஒரே விஷயத்தை ஒவ்வொருவரும் பார்க்கும்விதம் வித்தியாசமாக உள்ளது. இது ஏனெனில், வாழ்வை நீங்கள் உணரும் தீவிரம் வெவ்வேறு நிலைகளில் இருக்கிறது.
 
யோகாவின் நோக்கம்!: யோகாவின் முழு நோக்கமும் உங்களின் தற்போதைய உணர்வு நிலையில் இருந்து, இன்னும் உயர்வான நிலைகளுக்கு உங்களை வளரச் செய்வது தான். அதாவது, உங்களுக்குத் தெரிந்த ஒன்றிலிருந்து, தெரியாத ஒன்றை நோக்கி உங்களைக் வளரச் செய்வது. உங்களுக்குத் தெரியாத ஒன்றைப் பற்றிப் பேசினால் ஒன்று நம்புவீர்கள். அல்லது நம்பாமல் இருப்பீர்கள். எப்படியானாலும், அது உங்கள் வளர்ச்சிக்கு உதவாது. எனவே உங்களுக்குத் தெரிந்திருக்கும் உடலில் இருந்து ஆரம்பிப்போம். உடலிற்கு பயிற்சிகள் தந்து, அதை நன்னிலைக்குக் கொணர்ந்து, அடுத்து நீங்கள் அறிந்திருக்கும் மனதையும் சமன் செய்து, அதற்குப் பின், அதையும் தாண்டிய அடுத்த நிலைக்கு அழைத்துப் போவதுதான் யோகா. நாம் இருக்கும் நிலையிலிருந்து ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தால், நாம் செல்லவேண்டிய இடத்தை நிச்சயம் சென்றடைவோம்.
 
இப்போது எங்கேயிருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து அடுத்த அடியை எடுத்து வைப்பதுதான் வளர்ச்சி. உங்களுக்குத் தெரியாததைப் பேசினால் வெறும் கற்பனைதான் வளரும். கற்பனைகள் கட்டுக்கடங்காது. தெளிவும் தராது. இன்று மதத்தின் பெயரால் இருப்பவை எல்லாம் கதைகள் மட்டும்தான். எது கற்பனை, எது உண்மையென்று புரிவதில்லை. நிறைய கதைகள், ஒரு கதைக்குள் இன்னொரு கதை. எங்கே தொடங்குகிறது, எங்கே முடிகிறதென்றே தெரியாது.
 
யோகா எனும் விஞ்ஞானம்: எனவே யோகாவை நாம் அறிந்திருக்கும் உடல், சுவாசம், மனம் ஆகியவற்றின் அளவில் தொடங்குகிறோம். இது ஒரு ஃபார்முலா போல். ஹைட்ரஜனின் இரண்டு அணுக்களையும், ஆக்ஸிஜனின் ஒரு அணுவையும் கலந்தால் தண்ணீர் கிடைக்கும். இதை ஒரு விஞ்ஞானி கலந்தாலும் தண்ணீர்தான் கிடைக்கும். முட்டாள் கலந்தாலும் தண்ணீர்தான் கிடைக்கும். அதேபோல் யோகப் பயிற்சிகளை அறிந்தவர் செய்தாலும், அறியாமையில் செய்தாலும், செய்ய வேண்டிய முறையில் செய்தால் பலன் கிடைத்தே தீரும்.
 
எனவே ஆரம்பத்தில் உடலில் சில பயிற்சிகள் செய்து, பிறகு சுவாசத்திற்கு சென்று, பிறகு மனதை அணுகி, அதன்பின் உங்கள் உள்தன்மையை அணுக வேண்டும். இப்படி பல அடுக்குகளையும் நாம் சரிசெய்ய வேண்டுமென்றாலும், பயிற்சிகள் இவையனைத்தையும் ஒரே நேரத்தில் தான் அணுகுகிறது. இவை எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு பயிற்சி செய்யாவிட்டால், அவை வெறும் உடற்பயிற்சி ஆகிவிடக்கூடும். எனவே நீங்கள் சொல்வது போல் பிரிவுகள் இல்லை. யோகா என்றாலே ஒன்றியிருப்பது. பற்பல யோகப் பயிற்சிகளும் அந்த ஒருநிலையை அடைவதற்கே

Good one from Sadguru

கேள்வி: கடவுளை வழிபடுவதால் கஷ்டங்கள் தீரும் என்கிறார்கள். இது வியாபாரம் போல் அல்லவா இருக்கிறது? இது சரியா?

சத்குரு: நம் கலாச்சாரத்தில், பேரம் பேசுவதற்கான மொழியாக வழிபாட்டை உருவாக்கவில்லை. வழிபட்டால், கடவுள் நமக்கு ஏதேனும் செய்வார் என்ற எதிர்ப்பார்ப்புடன் செய்வதற்கும் வழிபாடு உருவாக்கப் படவில்லை. உங்களுக்குள் ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கவே வழிபாடு எனும் கருவி உருவாக்கப்பட்டது.



பக்தி என்பது ஒரு மனிதனுக்குள் நுழையும் போது, அவனிடம் எல்லாவிதமான நல்ல தன்மைகளும் உருவாகிறது. என்றாலும் சும்மா அமர்ந்தநிலையில் அனைவராலும் பக்தியை உணர முடிவதில்லை. அதை உணர்வதற்கு ஏதேனும் செயல் தேவைப்படுகிறது. அதற்கான கருவியாய் உருவாக்கப் பட்டதுதான் வழிபாடு. இந்த வழிபாடு காலப்போக்கில் பல வடிவங்களை ஏற்றது. இதில் பக்தியென்பது மறக்கப்பட்டு, வியாபாரம் மேலோங்கி நிற்கிறது.

கோவிலில் செய்தால் தான் வழிபாடு என்றில்லை. வழிபாட்டை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். அல்லது வழிபாடு செய்யாமல் பக்தியோடு இருக்கமுடியும் என்றால் அப்படியும் இருக்கலாம். பக்தியை பெருக்கெடுக்கச் செய்வதற்குத் தான் வழிபாடு. கோவிலில் வழிபடலாம். பணியாற்றுமிடத்தில் பக்தியோடு செயல்படலாம். முடியுமெனில் மரத்தடியில் சும்மா அமர்ந்தபடியே பக்தியோடு இருக்கலாம். இது உங்கள் விருப்பம். ஆனால் பக்தி என்பது உங்களுக்குள் வரவேண்டும். வாழ்வை முழுமையாய் உணர்வதற்கு பக்தியை போல் எளிமையான கருவி இல்லை. இதை உயர்நிலை புத்திசாலித்தனம் என்றும் கூட சொல்வர்.

சில காலங்களுக்கு முன்பாக என்னிடம் ஒருவர், “நான் 25 வருடங்களாக கடவுளை வழிபட்டு வந்தும் எனக்குள் பக்தி என்பதை நான் உணர்ந்ததில்லை. ஆனால் எனக்குத் தெரிந்த மனிதர் ஒருவர் கடவுள் முன்பு அமர்ந்தவுடனேயே, அவர் கண்களில் கண்ணீர் வருகிறது. எப்பொழுதும் அவர் ஆனந்தமாக இருக்கிறார். எனக்கு ஏன் அப்படி நடக்கவில்லை?” என்று கேட்டார். “உங்களுக்கு மிகவும் பிடித்தமானவர் யார்?” என்று கேட்டேன். அவர், “எனக்கு என் மனைவியை அதிகம் பிடிக்கும். ஆனால் அவர் இறந்து 10 வருடங்கள் ஆகிவிட்டன.” என்றார்., “அப்படியானால் நீங்கள் உங்கள் மனைவியின் புகைப்படத்தை வைத்து வழிபடுங்கள். பின்பு பார்ப்போம்” என்று அவரை அனுப்பி வைத்தேன். ஒரு வாரம் கழித்து வந்தவர், “இப்போது என் கண்களிலும் கண்ணீர் வருகிறது. ஆனந்தமாக இருக்கிறது” என்றார்.

பக்தியை உருவாக்குவதற்குத் தான் வழிபாடு பிறந்தது. அதை மூட நம்பிக்கையாக மாற்றிடாமல் சரியான முறையில் உபயோகிக்க வேண்டும். நம்மை சுற்றி இருப்பவர்களை ஏற்க மனமில்லை, ஆனால் கடவுள் மீது மட்டும் நமக்கு அன்பு இருக்கிறது. இது எப்படி? படைத்தவர் மீது அன்பாக இருந்தால், அவர் உருவாக்கிய படைப்புகளின் மீதும் அன்பு வர வேண்டும் தானே? நமக்கு யாரோ ஒருவரை மிகவும் பிடிக்குமென்றால் அவர் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் நமக்குப் பிடிக்கும் அல்லவா!
பிரபஞ்சத்தை உருவாக்கிய கடவுளின் மீது வழிபாட்டின் காரணமாக அன்பு பெருகுமாயின், அதே வழிபாட்டை சரியான விதத்தில் பயன்படுத்தினால் அவர் உருவாக்கிய படைப்புகளின் மீதும் அன்பு பெருகும்
.

எல்லாவற்றின் மீதும் அன்பு பெருக்கெடுக்கும் போது, சொல்லில் அடங்கா இனிமையால் அவன் ஆளப்படுவான். தன்னிச்சையாக, எவ்வித முயற்சியும் இன்றி அவன் வாழ்வே இன்பமாக, ஆனந்தமாக மாறும்.

இதனால் தான் பக்தியும், அதை வெளிக் கொணரும் கருவியான வழிபாடும் நம் கலாச்சாரத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தன.

Saturday, June 6, 2015

SIVAPURANAM - POEM - By ManikkaVasagar



திருச்சிற்றம்பலம்


நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க


வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க


ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி


ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்
.


கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்


எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே


வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே


ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை


மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,

விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்


தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்

பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே


அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில்

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்


மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே


அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.

சிவபுராணம் திருவாசகம் Sivapuranam (Part of ‘Thiruvachakam’)

சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும்.



திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது.

95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது.

அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது.

மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன.

Sivapuranam is being part of the Saiva work ‘Thiruvachakam’, written by the Saiva Saint Manickavachakar who is believed to have lived during the end of 9th Century A.D. It needs no other explanation than the saying:

"thiruvAchakaththukku urukAdhAr oru vAchakaththukkum urukAr"

திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார்

(people who do not melt (with bhakthi) at hearing thiruvAchakam, will not be able to enjoy (melt) any other song(statement) )

Sivapuranam is forming first part of Thiruvachakam. 

The hymn, with its 95 lines (Kalivenba poetic format), draws a detailed account on the origin, appearance and characters of Lord Shivas, the primes deity of Saivites. 

Further the work explains that the soul is in association with an entity called Anava (anavam) from beginningless period. Anava is not ego and it is a malam (an impurity) associated with the soul .

It is the source of all negative qualities like ignorance, ego etc,. Under its bondage, the soul was unable to know itself and the God above it.

The all-merciful God, Lord Siva, wanted to free the soul from the grip of Anava. The text is simple and understandable to most of the Tamil speaking devotees.