தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இதோ தை மாதமும் பிறந்துவிட்டது. வழியும்கூட பிறந்திருக்கும். ஆனால், வழி மட்டும் பிறந்துவிட்டால் போதுமா? பிறந்துள்ள வழியில் செல்ல ஒளியும் பிறக்கவேண்டும் அல்லவா?
ஒளி என்றால் வெளிச்சம் என்பது மட்டுமே பொருள் அல்ல; ஒருவரிடம் இல்லாததை எது தருகிறதோ அதுவே ஒளி!வறுமையில் வாடும் ஒருவனுக்கு பொருட்செல்வம் கிடைப்பதுதான் அவனுக்கான ஒளி;கல்வி அறிவு இல்லாதவனுக்கு அறிவுச் செல்வம் கிடைப்பதுதான் அவனுக்கான ஒளி; கண்களின் பார்க்கும் திறன் இல்லாதவர்களுக்கு பார்க்கும் திறன் கிடைப்பதுதான் அவனுக்கான ஒளி. மொத்தத்தில், ஒருவனுக்குத் தேவையான ஒன்று அவனுக்குக் கிடைப்பதுதான் அவனுக்கான ஒளி!
சரி,
இந்த ஒளி என்பது எங்கிருந்து மனிதனுக்குக் கிடைக்கிறது?
சூரியனில் இருந்தா? சந்திரனில் இருந்தா? அல்லது வானத்தில் மின்னும் நட்சத்திரங்களில் இருந்தா? உண்மையில் இந்த மூன்றில் இருந்தும் ஒளி கிடைப்பதில்லை. பின் இந்த ஒளி எங்கிருந்துதான் கிடைக்கிறது? இதைப் பற்றி கடோபநிஷத்தில் ஒரு மந்திரம் உள்ளது. அந்த மந்திரம் இதுதான்.
கடோபநிஷதம் நசிகேதனுக்கும் யமனுக்கும் இடையில் நடந்த உரையாடல்களின் தொகுப்பாகும்.
ந தத்ர ஸூர்யோ பாதி சந்த்ர தாரகம்
ந இமோ வித்யுதோ பாந்தி குதோய மக்னி:
தமேவ பாந்தமனுபாதி ஸர்வம்
தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி
எங்கே சூரியன் ஒளிர்வதில்லையோ அங்கே சந்திரனும் நட்சத்திரங்களும்கூட ஒளிர்வதில்லை. மின்னலும் ஒளிர்வதில்லை. இந்த அக்னியில் இருந்து வரும் ஒளியினால்தான் அத்தனையும் ஒளிர்கின்றன. இந்த அக்னியின் மூலம் எது என்று பார்த்தால், அந்த மூலம்தான் ஆதிசக்தியான பிரம்மம். அந்த பிரம்மத்தில் இருந்தே அனைத்தும் ஒளியைப் பெறுகின்றன.
இந்த மந்திரத்தைப் பாராயணம் செய்தால் இறைவனின் அருளால் இறைவனை உணரமுடியும்; இறைவனின் அருளால் வாழ்க்கை மகிழ்ச்சியும் நிம்மதியும் தருவதாக அமையும்.
இந்த மந்திரத்தை பாராயணம் செய்யமுடியாதவர்களுக்கு தாயுமானவரின் இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
தாயுமானவர் திருமறைக்காடு என்னும் வேதாரண்யம் என்ற ஊரில் பிறந்தவர். இவர் திருச்சியை ஆண்டு வந்த விசயரகுநாத சொக்கலிங்கம் என்ற அரசரிடம் அரண்மனைக் கணக்கராக பணிசெய்து வந்தார். தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் மிகுந்த பாண்டித்யம் பெற்றுத் திகழ்ந்தவர். ஒருமுறை இவர் அரச சபையில் இருந்தபோது, முக்கியமான ஒரு ஆவணத்தை கசக்கி தூரமாகப் போட்டார். இப்படிச் செய்வது அரசரையும் அரசியையும் அவமதிப்பதாகும் என்று அவையில் இருந்த மற்றவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதேநேரத்தில் அங்கு வந்த சிவாச்சார்யர்கள் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியின் ஆடையில் நெருப்பு பற்றிக்கொண்டதாகவும், தாயுமானவர் வந்து தம் கைகளால் கசக்கி அணைத்ததாகவும் தெரிவித்தனர். இதனால், அங்கிருந்தவர்கள் அனைவரும் தாயுமானவரின் தெய்விகத்தன்மையைப் புரிந்துகொண்டார்கள்.
தாயுமானவர் எண்ணற்ற பக்திப் பாடல்களை இயற்றி உள்ளார். நாம் முன்பு பார்த்த கடோபநிஷத மந்திரத்துக்கு பதிலாக தாயுமானவரின் இந்தப் பாடலையும் பாராயணம் செய்யலாம்.
கண்முதற் புலன்கள் அந்தக்கரணங்கள் விளங்குமெத்தால்
தண்மதியருக்கனங்கி தாரகை விளங்குமெத்தால்
விண்முதற் பூதமியாவும் விளங்குமெத்தால் - அந்த
உண்மையாம் சிவப்ரகாச ஒளியது வாழி
மிகவும் எளிமையான இந்தப் பாடலை தினமும் பாராயணம் செய்தால், இறைவனின் அருள் என்னும் ஒளி பெற்று சிறப்புற வாழலாம்.

No comments:
Post a Comment