Wednesday, December 25, 2019

சதுரகிரி மலை தல வரலாறு

நான்கு திசைகளிலும் மலைகளால் சூழப்பட்டிருப்பதால் இப்பகுதிக்கு சதுரகிரி என பெயர் ஏற்பட்டது. இந்த சதுரகிரி வனப்பகுதி மொத்தம் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது. 

புராணங்களின் படி இங்கு வாழ்ந்த பச்சைமால் எனும் இடையர் குல வாலிபன் தனது மனைவி சடைமங்கையுடன் வாழ்ந்து வந்தான். சடைமங்கை தினமும் பசும்பாலை தனது மாமனாரிடம் கொடுத்து விட்டு வருவது வழக்கம். அப்படி ஒருமுறை அவள் பசும்பாலை கொண்டு செல்லும் வழியில் ஒரு துறவி அந்த பாலை தனக்கு குடிக்க தருமாறு கேட்டார். சடைமங்கையும் கொடுத்தாள். இப்படி தினமும் அந்த துறவிக்கு பசும்பால் கொடுத்துவருவதை அறிந்த அவள் கணவன் பச்சைமால் அவளை அடித்து துரத்திவிட்டான், இதையறிந்த அந்த துறவி சடைமங்கையை, சடதாரி எனும் பெயர்கொண்ட காக்கும் தெய்வ சிலையாக மாற்றிவிட்டு மறைந்தார்.

தனது தவறை உணர்ந்த பச்சைமால் அன்று முதல் இங்கு தவமிருக்கும் சித்தர்களுக்கு பால் தானம் செய்து வந்தான். ஒரு முறை சிவபெருமான் ஒரு துறவி வேடத்தில் சிவபூஜைக்கு பால் கறக்கப்படும் பசுமாட்டின் பாலை கறந்து குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்டு கோபம் கொண்ட பச்சைமால் துறவியின் தலையில் தனது கோல் கொண்டு அடித்தான். அப்போது சிவன் தனது உண்மை வடிவில் தோன்றி அனைவர்க்கும் கட்சி தந்தார். பச்சைமாலுக்கு மோட்சம் அளித்து சித்தர்களின் வேண்டுகோளின் படி இம்மலையிலேயே மகாலிங்கம் என்ற லிங்கமாக தோன்றினார். இன்றும் இந்த லிங்கத்தின் தலை பகுதியில் அடிபட்ட வடுவிருப்பதை காணலாம்.

இந்த சதுர கிரி மலையில் பல லிங்க கோவில்கள் இருக்கின்றன. இவற்றில் சில சித்தர்கள் ஸ்தாபித்ததாகவும் இருக்கின்றன. அகத்திய சித்தர் இந்த மலையில் தங்கி தவமியற்றிய போது ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டு வந்துள்ளார். 

பிற்காலங்களில் சுந்தரானந்த சித்தர் அகத்தியர் பூஜித்த அந்த லிங்கத்திற்கு தொடர்ந்து பூஜைகள் செய்து வந்ததால் பிற்காலங்களில் அந்த லிங்கம் “சுந்தரமூர்த்தி லிங்கம்” என அழைக்கப்படலாயிற்று. இங்கு “சந்தன மகாலிங்கம்” கோவில் இருக்கிறது. பார்வதி தேவி இந்த லிங்கத்தை சந்தனம் கொண்டு பூஜித்து சிவனின் ஒருபாதியாகும் அர்த்தநாரீஸ்வர உருவத்தை பெற்றதாக கூறப்படுகிறது. இந்த சந்தன லிங்கத்தை சட்டைநாதர் சிதறும் வழிபட்டுள்ளதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.

சதுரகிரி மலை ஏறும் வழியில் ரெட்டை லிங்க கோவில் இருக்கிறது. ராமதேவர் எனும் சித்தர் இந்த ரெட்டை லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. மகாலிங்கம் கோவிலில் இருந்து சற்று தொலைவில் “தவசி பாறை” என்ற ஒரு இடம் இருக்கிறது. இப்பகுதியில் இருக்கும் நீர் மற்றும் மண் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. 

பார்வதி தேவி இப்பகுதிக்கு வந்த போது, உடன் வந்த சிவலோக பணிப்பெண்கள் இத்தீர்த்தத்தில் நீராடும் போது மஞ்சள் தேய்த்து குளித்ததால், இங்கிருக்கும் நீர் மற்றும் மண் மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கு காரணம் என கூறுகிறார்கள். 

சதுரகிரி மலை சிறப்பு 

மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர்களை சேர்ந்தது தான் இந்த சதுரகிரி மலை. வனங்களும், தூய்மையான அருவிநீர் மற்றும் பல அற்புத மூலிகைகளை கொண்ட பகுதியாக இந்த சதுரகிரி மலை இருக்கிறது. இதன் காரணமாக பழங்காலந்தொட்டே இந்த சதுரகிரி மலை சித்தர்களின் இருப்பிடமாக இருந்து வந்திருக்கிறது. 

வருடத்திற்கொருமுறை இந்த சதுரகிரி மலை பாதயாத்திரை மேற்கொண்டு, இங்கிருக்கும் தீர்த்தங்களில் நீராடி, சிவபெருமானை வழிபடுவதால் எப்பேர்ப்பட்ட உடல்நலக்குறைபாடுகளும் நீங்குவதாக பல வருடங்கள் சதுரகிரி யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் அனுபவ வாக்குமூலமாக இருக்கிறது.

ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் சதுரகிரி யாத்திரை மேற்கொள்கின்றனர். சித்ரா பௌர்ணமி அன்று ஏராளமான பக்தர்கள் சதுரகிரி மலை பாதயாத்திரை மற்றும் கிரிவலம் வந்து சிவனை வழிபடுகின்றனர். மகாசிவராத்திரி அன்று இங்கிருக்கும் அனைத்து லிங்க கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. திருமணம், குழந்தை பேறு, நோய்கள் நீங்க, தொழில் வியாபாரம் மேம்பட என பலவிதமான கோரிக்கைகள் சதுரகிரி யாத்திரை மேற்கொண்டு சிவனை வழிபடுவதால் நிறைவேறுவதாக கூறுகிறார்கள். இன்றும் பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகள் வடிவிலும், அருவமாகவும் சித்தர்கள் வாழ்வதால் இங்கு வந்து வழிபாடும் போது அனைத்து சித்தர்களின் ஆசிர்வாதங்களும் கிடைக்கிறது.

Electro magnetic waves are difference between normal ground and mountain. When humans are around in mountains, they feel that they get different feeling, power. Its difficult to understand the waves in mountains especially in south india.

Saturday, August 10, 2019

Temple 32 Sankaran Kovil, Tamilnadu, India

ஆதியில் இத்தலத்திற்கு வடக்கில் 7 மைல் தூரத்திலுள்ள கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் ஸ்வாமி கோவிலுக்குச் சொந்தமாக புன்னைவனத்தில் இவ்விடத்தில் ஒரு பூந்தோட்டம் இருந்தது. இத்தோட்டத்திற்கு காவல் இருந்த காவற்பறையன் என்பவன் அங்கிருந்த புற்று ஒன்றை வெட்ட, அதிலிருந்த ஓரூ பாம்பின் வால் வெட்டப்பட்டு அதன் அருகில் ஒரு சிவலிங்கம் இருப்பதைக் கண்டான். திருநெல்வேலி அருகில் மணலூரில் அரசாண்டு வந்த உக்கிர பாண்டியர் என்ற மன்னரிடம் , காவற்பறையன் இதைத் தெரிவித்தான். மன்னனும் , அவனுடன் சென்று புற்றினையும் , புற்றிடங்கொண்டாரையும் , வால் வெட்டுப்பட்ட பாம்பினையும் கண்ட போது , இறைவன் அசரீரி மூலம் ஆணை தர, மன்னனும் அவ்விடத்தில் கோவில் கட்டி சங்கரன் கோவில் ஊரை உருவாக்கினார். காவற்பறையான் மற்றும் இம்மன்னனின் திருவுருவங்களை இக்கோவில் தூண்களில் காணலாம். அப்பொழுது கரிவலம் வந்த நல்லூரை அரசாண்டு வந்த பிரகத்துவச பாண்டியன் என்பவனும் இக்கோவிலை பெரியதாக்கி திருப்பணி செய்தான்.தற்போது கிடைத்துள்ள கல்வெட்டுகளிலிருந்து உக்கிர`பாண்டியனமன்னன் இக்கோவிலைச் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டியதாகத் தெரிகிறது.

சமய ஒற்றுமை

இக்கோவிலில் சங்கரனார் மற்றும் கோமதியம்மைக்கு மட்டுமே இரண்டு சந்நிதிகள் , தெருவிலிருந்து நேரே தரிசிக்குமாறு இரண்டு பெரும் வாயில்களுடன் அமைந்துள்ளது. ஆனால் நடுவில் உள்ள சங்கர நாராயணருக்கு தலைவாசல் ஒன்று இல்லாதபடி உள்ளடங்கியே உள்ளது. மேலும் அம்மையின் வேண்டுதல் படி இறைவன் சங்கரநாராயணராகக் காட்சி கொடுத்தமையால் சங்கரநாராயணர்த் திருக்கோவில் பின்னால் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருத இடமுள்ளது. வைணவப் பெரியார் இராமானுசர் மற்றும் வீர வைணவர்களான விஜயநகர மன்னர்கள் காலத்திலும், .திருமாலுக்கு இக்கோவிலோடு தொடர்பினை உண்டாக்கி இரண்டு பெருந் தெய்வங்களும் இணைந்ததே சங்கரநாராயணர் என்று உருவாக்கிவிட்டனர் என்பர்.
பரமேஸ்வரன் தன்னுள் அடங்கிய நாராயணரை வெளிப்படையாகத் தனது இடது பாகத்தில் காட்டி அருளினாரா ? அல்லது சிவன், திருமால் என்ற இரண்டு பெருந் தெய்வங்களும் இணைந்ததால் சங்கரநாராயணரா ? எது எப்படியிருப்பினும் , தற்காலத்திற்கு மிகவும் அவசியமான சமய ஒற்றுமைக்கு இக்கோவில் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கி மக்களை நல்வழிப்படுத்தி வருகிறது. என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை . தமிழ்நாட்டில் சங்கரநாராயணருக்கு தனிக்கோவிலாக அமைந்து தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வழிபடும் ஒரே திருக்கோவில் இதுவேயாகும்.

புராண வரலாறு

சிவனிடத்தில் உமா தேவியார் , சங்கர நாராயணன் திருக்கோலத்தைக் காட்ட வேண்டும் என்று பிரார்த்திக்க , இவ்விடம் சென்று தவம் செய்ய சிவனும் ஆணையிட்டார். உமா தேவியாரும் இவ்விடம் வர உடன் வந்த தேவர்கள் புண்ணை மர விருட்சங்களாகவும் , உடன் வந்த தெய்வ பெண்கள் பசுக்களாகவும் , உடன் வந்த முனிவர்கள் ஆதி சைவர்களான பட்டமார்களாகவும் மாற, இத்தலத்தில் உமா தேவியார் நெடுங்காலம் தவம் செய்து அருளினார். சிவபெருமானும் , இப்புன்னைவன சேத்திரமடைந்து ஒரு ஆடி மாதம் பௌர்ணமியன்று உமா தேவியாருக்கு சங்கர நாராயணராகத் திருக்காட்சி கொடுத்தார். உமா தேவியார் திரும்பவும் வேண்டிக் கொள்ள , சிவபெருமான் , சிவலிங்க வடிவமாகக் காட்சி கொடுத்து , இப்புன்னை வனத்திலேயே உமா தேவியாருடன் நிரந்தரமாக தங்கியருளினார்.

பிரார்த்தனைத் தலம்


இத்தலம் தென் கிழக்கு தமிழக மக்களின் ஒரு பிரார்த்தனை தலம் ஆகும். பாம்பு , தேள் போன்ற சிறு விஷ ஜந்துக்களிலிருந்து நமக்கு துன்பம் வராதிருக்க பிராணிகளின் வெள்ளியிலான உருவங்களை வாங்கி உண்டியலில் செலுத்துவர். இங்கு கிடைக்கும் புற்று மண்ணைக் கரைத்துப் பூசினால் தோல் வியாதிகள் நீங்குவது யாவரும் அறிந்ததே. இத்தலத்திற்கு வந்து நாகசுனையில் மூழ்கி முறையாக வழிபடுவோர் குட்டம் , குன்மம் முதலிய தீராத நோய்களிலிருந்து விடுபட்டு நலம் பெறுகின்றனர்.

Temple 31 : Kalugasalamoorthy Temple


Constructed in the Dravidian style of architecture, thetemple is believed to have been expanded during the 18th century with the images excavated from Kalugumalai. The core temple has a rock-cut architecture exemplary of early Pandyan Art. 

As per Hindu legend, the temple is associated with the period of RamayanaRavana, the demon king, while abducting Sita, the consort of Rama, killed Jatayu, the eagle. Rama did the final rites for Jatayu, who informed Rama about the abduction before his life ended. Jatayu's brother Sambathi, who was also called Kazhugumahamunivar, was worried about the repercussions of him not doing his karma, the final rites of his brother. Rama advised him to do his penance at Gajamukaparvatham and taking holy dip in the tank. Ages passed by and the time arrived when Muruga was pursuing to slay Surapadman, another demon. Tharukasuran, the brother of Surapadman, was troubling the sages in the region. Murugan slayed Tharukasuran and was resting at Kazhugumalai. Sambathi was assisting Murugan and he also indicated the hideout of Surapadman, whom Murugan slayed subsequently. Pleased with his devotion, Murugan gave salvation. The place came to be known as Kazhugumalai since the sage Kazhugumahamunivar resided here.

Friday, July 5, 2019

Temple 30 : அத்திவரதர்

வைணவ திருத்தலங்களில் அர்ச்சாவதாரமாக அருள்பாலிக்கும் ஸ்வாமியின் மூல விக்கிரகமானது, மூவகையில் ஒன்றாகத் திகழும்.  சுதை, சிலை, தாரு வடிவங்களே அவை.
மூலிகைகள், சுண்ணம் போன்றவற்றால் வடிக்கப்படும் திருமேனி, சுதை அமைப்பாகும். கருங்கல், சாளக்கிராமம், மரகதக்கல் போன்றவற்றால் வடிக்கப்படுவது சிலை வடிவம். தாரு வகையானது மரத்தால் ஆனது. திருப்பதி பெருமாள் சாளக்கிராம கல்லால் உருவான சிலை வடிவம். திருவரங்கத்துப் பெருமாள் சுதையால் உருவானவர். அதனால், அங்கு அவருக்கு அபிஷேகம் கிடையாது. பூரி ஜகந்நாதர் தாரு வடிவமானவர்; அதாவது, மரத்தாலான திருமேனி அவருடையது. அதேபோல், காஞ்சி அத்தி வரதரும் அத்தி மரத்தாலான தாரு ரூபமானவர்.  


40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளிவரும் அத்தி வரதர் ஆதியிலேயே தாரு வடிவமாக இருந்தாரா, இப்போது நாம் கருவறையில் வணங்கக்கூடிய வரதர் யார், அவர் சிலை ரூபமாக மாறியது எப்படி... என்றெல்லாம் பலருக்கும் சந்தேகம் வரக்கூடும்
பல யுகங்களுக்கு முன்பாக காஞ்சியில் அஸ்வமேத யாகம் செய்தார் பிரம்மா. காஞ்சியில் ஒரு புண்ணிய காரியத்தைச் செய்தால், அது ஆயிரம் மடங்கு பலனைத் தரும் என்கின்றன ஞான நூல்கள். ஆகவே, பிரம்மதேவனும் காஞ்சி அத்திகிரி மலையில் இந்த யாகத்தைச் செய்தார். யாகத்தில் பூர்ணாஹுதி செய்யும் தருணத்தில்,  பெருமாள் பிரம்மாவுக்குத் திவ்ய தரிசனத்தை அளித்தார்.
பிறகு, மூல மூர்த்தியாகவும் உற்சவ மூர்த்தியாகவும் காட்சி தந்தார். அப்போது, யாகத்தின் வெம்மை உற்சவ மூர்த்தியான வரதராஜப் பெருமாளின் திருமுகத்தில் பட்டு தகித்தது. அதனால், உற்சவரின் திருமுகத்தில் கரும்புள்ளிகள் உண்டாயின. இன்றும் அந்த விக்கிரகத் திருமேனியில் நெருப்பு பட்ட கரும்புள்ளிகளைக் காணலாம். இப்படி, திருமாலின் திருமுகத்தில் தழும்புகளுடன் திகழும் சிலைமேனியை இரண்டே தலங்களில்தான் தரிசிக்கமுடியும்.
ஒன்று அத்திவரதர் கோயிலில்; மற்றொன்று திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோயிலில். குருக்ஷேத்திரப் போரில், அர்ஜுனனைக் காக்கும் பொருட்டு பல அஸ்திரங்களைப் பெருமாள் ஏற்றுக்கொண்டார். அப்படி, திருமுகத்தில் தாங்கிய பல அஸ்திரங் களின் வடுக்களோடு  காட்சியளிக்கிறார், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி (உற்சவர்)!
அத்தி மரத்தால் உருவாக்கப்பட்டு யாகத்தில் வழிபடப்பட்ட அத்தி வரதர் மூலவராகவும், யாகத்தில் தோன்றிய வரதர் உற்சவராகவும் பிரம்மனால் வணங்கப்பட்டார்கள். யாகம் நிறைவுற்றதும் இரண்டு திருவுருவங்களையும் சத்ய லோகத்துக்குக் கொண்டுசெல்ல விரும்பினார் பிரம்மன். ஆனால், திருமால் அத்திகிரியிலேயே தங்கி சகல ஜீவராசிகளுக்கும் அருளாசி வழங்கத் திருவுளம் கோண்டார்.  பிரம்மன் வருந்தினார். அவரைத் தேற்றிய பெருமாள், `ஆண்டுதோறும் வைகாசி மாதம் பத்து நாள்கள் காஞ்சிக்கு வந்து தங்கி, எனக்கு பிரம்மோற்சவம் நடத்தி பேறுபெற்றுக்கொள்' என்று அருளினார்.

அதன்படியே கலியுகம் முடியும்வரை பிரம்மா இங்கு வந்து வையம் போற்றும் வைகாசிப் பிரம்மோற்சவ பெருவிழாவைக் கொண்டாடிக் கொள்கிறார்!

எம்பெருமானின் திருவுளப்படியே, பிரம்மனால் உருவான அத்தி வரதர் மூலவராகப் பிரதிஷ்டை செய்யப்பட்டார். யாக நெருப்பால் தகிக்கப்பட்ட அந்த மூர்த்தி வெப்பத்தால் உக்கிரம் அடையப் பெற்றார் என்றும் அவரைக் குளிர்விக்க தினமும் 100 குடம் நீர் அபிஷேகிக்கப் பட்டது என்றும் கூறுகிறார்கள். ஒரு கால கட்டத்தில் அத்திவரதரே தமக்கு பூஜை செய்யும் அர்ச்சகரின் கனவில் தோன்றி, `‘எனக்கு இந்த அபிஷேகம் எல்லாம் போதாது. எம்மை, இந்தக் கோயிலின் அனந்தசரஸ் தீர்த்தத்தில் வைத்துவிடுங்கள்; உங்களுக்கான மூலமூர்த்தி பழைய சீவரம் என்ற தலத்தில் இருக்கிறார். அவரைக் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்து கொள்ளுங்கள்’' என்று அருளினாராம்.

மேலும் , ‘`எம்மை 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருக்குளத்திலிருந்து வெளியே எழுந்தருளச்செய்து, 48 நாள்கள் வைத்து வழிபடலாம்'' என்றும் அருளினாராம். பெருமாளின் ஆணைப்படியே பக்தர்கள் பழைய சீவரத்துக்குச் சென்றார்கள். அந்த ஊர் மக்களோ, தங்கள் கோயிலின் பெருமாளை எடுத்துச்செல்ல எதிர்ப்பு தெரிவித்தார்களாம். பின்னர், காஞ்சிப் பெருமாளின் ஆணைக்கேற்ப அந்த மக்கள் பழைய சீவரத்துப் பெருமாளைக் காஞ்சிக்கு அனுப்பினார்கள்.
அப்போது, ``ஆண்டுக்கு ஒருமுறை தைப்பொங்கலுக்கு மறுநாள் காஞ்சி வரதரின் உற்சவர், பழைய சீவரத்துக்கு எழுந்தருள வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்கள். அதன்படியே, இன்றும் காஞ்சி அருளாளர் பாரிவேட்டை என்ற விழாவின்பேரில் பழைய சீவரத்துக்கு வந்து அருள்பாலிக்கிறார்.
இங்ஙனம், பழைய சீவரம் பெருமாள் காஞ்சியில் மூலவராக அருள்பாலிக்க, பிரம்மா உருவாக்கிய வரதர் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனந்தசரஸ் தீர்த்தத்திலிருந்து வெளியே எழுந்தருளி காட்சி கொடுத்தார். காலம் செல்லச் செல்ல மனிதனின் ஆயுள் குறையத் தொடங்கியது. சிலர், தங்கள் ஆயுளுக்குள் அத்திவரதரை தரிசிக்க இயலாமல் போகும் நிலை. ஆகவே, அத்திவரதரே மனம்கனிந்து 60 ஆண்டுகள் என்பதை 40 ஆண்டுகள் என்று ஓர் அர்ச்சகரின் திருவாக்கின் வழியே மாற்றினாராம். இப்படி ஒரு திருக்கதை!
த்தி மரத்தாலான பெருமாளுக்கு அபிஷேகம் போன்றவற்றைச் செய்யமுடியாது என்று கருதிய பிரம்மனே, யாகத்துக்குப் பிறகு அத்தி வரதரை அனந்தசரஸ் குளத்தில் வைத்துவிட்டு, அவருக்குப் பதிலாக கல்லாலான திருமேனியைப் பிரதிஷ்டை செய்தார் என்றும் ஒரு புராணச் செய்தி சொல்லப்படுகிறது.
அந்நியர்களின் படையெடுப்பின்போது (கி.பி. 1687 முதல் 1711-ம் ஆண்டு வரை) நம் தேசத்தின் ஆலயங்கள் பலவும் சூறையாடப்பட்டன. மூல விக்கிரகங்களுக்கு அடியில் நவரத்தினங்களும் ஐஸ்வர்யங்களும் வைக்கப்பட்டிருக்கும் என்பதால், பல ஆலயங்களில் மூலவர்களைச் சிதைத்துக் கொள்ளையடித்தார்கள் அந்நியர்கள். அப்படி, அத்திவரதர் திருமேனிக்கும் பங்கம் நேர்ந்துவிடுமோ என்று அஞ்சினார்கள் பக்தர்கள். ஆகவே, மூல அத்திவரதர் அனந்தசரஸ் திருக்குளத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டாராம். அப்போது, உற்சவர் திருமேனியை உடையார்பாளைய ஜமீன் வசம் ஒப்படைத்து, அவரைப்  பாதுகாக்கும்படி அர்ச்சகர்கள் கேட்டுக்கொண்டார்கள் எனவும் சொல்லப்படுகிறது.
வருடங்கள் பல ஓடின. மெள்ள மெள்ள அந்நியரின் ஆதிக்கம் நீங்கியது; தேசத்தில் அமைதி திரும்பியது. ஆனால், அப்போதைய தலைமுறைக்கு, மூல வரதர் திருக்குளத்தில் எங்கு வைக்கப்பட்டார், உற்சவர் எங்கு போனார் என்ற விவரங்கள் தெரியாமல்போயின. ஸ்வாமியே இல்லாத திருக்கோயிலாகத் திகழ்ந்தது, காஞ்சி வரதர் ஆலயம். இதனால் ஊர் மக்கள் கூடி கல்லாலான புதிய விக்கிரகத்தைச் செய்ய முடிவெடுத்தார்கள்.
இந்த நிலையில் தன்னை வெளிப்படுத்தத் திருவுளம் கொண்டார் வரதர். ஒருமுறை கடுமையான வறட்சி உண்டாகி, திருக்குளத்தின் நீர் வறண்டு போனது. பக்தர்கள் தூர்வாரச் சென்றபோது, நீராழி மண்டபம் அருகே கல்வெட்டு ஒன்று காணப்பட்டது.
அதில் ‘இங்கு வரதர் திருக்காட்சி கொண்டிருக் கிறார்’ என்று எழுதப்பட்டிருந்ததாம்.  அதன்படி, மக்கள் அகழ்ந்து மூல அத்திவரதரை எடுத்தபோது, அவர் திருவுளப்படி ஆதி மூலவரை அங்கேயே வைத்துவிட்டு மக்கள் உருவாக்கிய சிலையையே மூலவராக வணங்கினார்களாம்.
அதன் பிறகு, ஆதி மூலவரை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறையே வெளியே எடுத்து 48 நாள்கள் சேவித்து வருகிறார்கள் என்றும் ஒரு தகவல் உண்டு.

இப்படி, பலவிதமான தல வரலாறுகளைக் கொண்டது அத்திவரதர் திருமேனி. இது சரியா, அது சரியா என்று ஆய்வுகளை மேற்கொள்ளாமல் திவ்ய தரிசனத்தை மட்டுமே மனதில் கொண்டு அந்த வரதனைச் சேவித்து வாழ்வில் மேன்மை அடையவேண்டும். கிருத யுகத்தில் பிரம்மாவும் திரேதா யுகத்தில் கஜேந்திரன் எனும் யானையும் வரதனைச் சேவித்து அருள்பெற்றிருக்கிறார்கள் என்கின்றன புராணங்கள். கஜேந்திரனை முதலையிடமிருந்து காத்ததால், வரதன் ‘கஜேந்திர வரதன்’ என்றே வணங்கப்படுகிறார். அத்திவரதன் என்றால் அத்தி மரத்தால் ஆனவன் என்றும் அத்திகிரி என்ற மலை மீது இருப்பவன் என்றும் பொருள் சொல்வார்கள். அத்தி என்றால் யானை என்றும் தமிழில் அர்த்தமுண்டு.

துவாபர யுகத்தில் குருபகவான் இந்த வரதரை பூஜித்தார். இந்தக் கலியுகத்தில் அனந்தாழ்வான் என்ற ஆதிசேஷன் வணங்கி வருகிறான். அதனாலேயே, அனந்தசரஸ் எனும் ஆதிசேஷன் உருவாக்கிய தீர்த்தத்தில் அவர் இருந்து வருகிறார். 
அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்
ஆனை பரி தேரின்மேல் அழகர் வந்தார்’
என்று பலவாறு அத்திவரதர் வருகையை ஸ்வாமி தேசிகர் போற்றி வழிபட்டார்.
மனிதனுக்கு உயர்ந்த மூல மந்திரம் என்றால், அது காயத்ரி மந்திரம்தான். காயத்ரி மந்திரம் 24 அட்சரங்களைக் கொண்டது. அத்திகிரி பெருமாளை தரிசிக்க நாம் ஏறும் படிகள் 24. அனந்தசரஸ் திருக்குளத்தின் படிகள் 24. வரதருக்குச் சாத்தும் குடையின் அளவு 24 சாண். வரதருக்குச் சமர்ப்பிக்கப்படும் நைவேத்திய அமுது 24 படி. வரதரின் வருகையை அறிவிக்க வெடிக்கப்படும் வெடிவழிபாடு 24. பிரமோத்சவ காலத்தில் வரதர் காஞ்சியில் பயணிக்கும் தூரம் 24 கி.மீ. தூரம். எனவே, காயத்ரி மந்திரத்துக்கு ஏற்ற மந்திரமூர்த்தியாக வரதர் ஆதியில் தோன்றி அருள்பாலிக்கிறார்.

வாழ்நாளில் அவசியம் தரிசிக்கவேண்டிய அற்புத வைபோகம், காஞ்சி அத்திவரதர் தரிசனம்.  நாமும் அந்த அருளாளனை தரிசிக்கச் செல்வோம். அத்தி வரதன் 48 நாள்கள் நம்மோடு இருக்கப்போகிறார். எனவே, பக்தர்கள் 10, 15 நாள்கள் கழித்தும் ஸ்வாமி தரிசனத்தை மேற்கொள்ளலாம். கண்குளிர வரதனை தரிசிக்க, மனம் குளிர வரங்களைப் பெற்றுக்கொள்ள நம்மை நாமே தயார்படுத்திக்கொள்வோம். வரங்களை அள்ளித்தரும் வரதன் எல்லோருக்கும் அருளட்டும். 

Sunday, January 27, 2019

Temple 29 - Papanasam Temple






















As per Hindu legend, during the divine wedding of Shiva and Parvathi, there was heavy crowd at Kailash. Sage Agasthya could not get a vision of the event and was praying to Shiva at this place and pleased by his devotion, Shiva appeared to him and his wife Lopamundra in Kalyana posture. The falls nearby the temple is thus called Agasthiyar Falls.
As per another legend, sage Urosamar floated a set of flowers in Tamiraparani River and the first flower reached the shore at this place. The sage established a temple for Papanasanathar and worshipped the deity here.
The lingam, the iconic form of Shiva in the temple is believed to an aspect of Surya, one of the planetary deities. The temple forms a series of Navagraha temples in the banks of Tamiraparani river where each of the nine planetary deities are considered to reside in one temples. The temples are classified as Nava Kailasam and the presiding deity of all the nine temples is Kailasanathar. The temple is associated with the planet Surya (Sun) and considered first in the series of the nine temples.
The lingam is believed to have appeared from kala tree and is called as Mukkala Nathar.
There are images of Somaskanda, Rishabaroodar and Agastya close to the image with unique sculptural representation.
As per another legend, the king of celestial deities, Indra slayed a demon Dwastha, the son of Sukracharya (the Guru of Asuras) as he was performing a penance to seek superior powers against the Devas. Indra incurred Brahmatti Dosha, a sin attained for slaying the Brahmin. He roamed around a lot of places for doing penance and finally on the advise of Brihaspathi, he landed at Papanasam. Since his sin (Papam locally) was expiated in this place, it came to be known as Papanasam. This Legend is to Elucidate the real Importance of Good Brahmin Communities and also the Power of Temple