ஷீரடிக்கு யார் வர வேண்டும் என்றாலும், இல்லை யார் ஷீரடியிலிருந்து கிளம்ப வேண்டும் என்றாலும் சரி பாபாவின் அனுமதி இருந்தாலே அது நிகழும். அவ்வாறு இமாம்பாய் என்ற ஒரு பாபாவின் அடியவர், தன் ஊருக்குக் கிளம்புவதற்கு ஆயத்தமாகி பாபாவிடம் விடை பெறச் சென்றார். ஆனால், பாபா அவரை அப்போது ஊருக்குப் போக வேண்டாம் என்றும், நிலைமை சரியில்லை என்றும் கூறினார். இமாம்பாய் தன் வீட்டிற்கு போகும் அவசரத்திலும் ஆர்வத்திலும் பாபாவின் வார்த்தையை மீறிப் புறப்பட்டார். மேலும் அவர் கால்நடையாக செல்லலாம் என்றும் தீர்மானித்தார்.
ஷீரடியில் இருந்து பன்னிரண்டு மைல் தொலைவு வரை எந்தவோர் இடைஞ்சலுமின்றி அவர் கடந்தார். சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் அவர் சுராலா என்ற நதிக்கரையில் நடந்து சென்றார். அப்போது வானிலை மோசமாக இருந்தபடியால் அங்கிருந்த ஓர் அதிகாரி அவரை மேலும் பயணத்தைத் தொடர வேண்டாம் என்று எச்சரித்தார். இன்னும் நான்கு மைல் மட்டுமே எஞ்சியிருப்பதால், அவர்தான் செல்வதாகக் கூறிச் சென்றார். அவர் மூன்று மைல் தொலைவு சென்றதும், பலத்த காற்று வீசத் தொடங்கியது. இடியுடன் பெரும்மழை பெய்தது. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் கலக்கமுற்ற இமாம்பாய் சாயிநாதரை அழைத்தார். அப்போது வானில் ஒரு மின்னல் கீற்று வந்தது. அந்த ஒளியில் சாயிநாதரை தரிசித்தவர், சாயியைப் பணிந்து வணங்கியபடிஅந்த நதியைக் கடந்து சென்றார். அவர் நதியைக் கடக்கும் வரையில் தண்ணீர் அவரின் முழங்கால் அளவே இருந்தது. மறு கரைக்குச் சென்றதும் அவர் திரும்பி ஆற்றினை நோக்கும்போது அதில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதைக் கண்டார். பாபாவின் அருளால்தான் தன்னால் ஆற்றினைக் கடக்க முடிந்தது என்பதை அறிந்து அங்கேயே பாபாவுக்கு மனதார நன்றி கூறினார்.
சாயிநாதர் அன்னைக்கு நிகரானவர் ஆவார். ஒரு தாய் எவ்வாறு தன் குழந்தைக்கு ஆபத்து என்று தெரிந்த கணத்தில் ஒடிச்சென்று காக்கின்றாளோ, அவ்வாறே சாய்நாதர் தன் பக்தர்களுக்கு எந்த பிரச்னை என்றாலும் ஓடிச்சென்று அவர்களைக் காப்பார்.
ஷீரடியில் இருந்து பன்னிரண்டு மைல் தொலைவு வரை எந்தவோர் இடைஞ்சலுமின்றி அவர் கடந்தார். சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் அவர் சுராலா என்ற நதிக்கரையில் நடந்து சென்றார். அப்போது வானிலை மோசமாக இருந்தபடியால் அங்கிருந்த ஓர் அதிகாரி அவரை மேலும் பயணத்தைத் தொடர வேண்டாம் என்று எச்சரித்தார். இன்னும் நான்கு மைல் மட்டுமே எஞ்சியிருப்பதால், அவர்தான் செல்வதாகக் கூறிச் சென்றார். அவர் மூன்று மைல் தொலைவு சென்றதும், பலத்த காற்று வீசத் தொடங்கியது. இடியுடன் பெரும்மழை பெய்தது. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் கலக்கமுற்ற இமாம்பாய் சாயிநாதரை அழைத்தார். அப்போது வானில் ஒரு மின்னல் கீற்று வந்தது. அந்த ஒளியில் சாயிநாதரை தரிசித்தவர், சாயியைப் பணிந்து வணங்கியபடிஅந்த நதியைக் கடந்து சென்றார். அவர் நதியைக் கடக்கும் வரையில் தண்ணீர் அவரின் முழங்கால் அளவே இருந்தது. மறு கரைக்குச் சென்றதும் அவர் திரும்பி ஆற்றினை நோக்கும்போது அதில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதைக் கண்டார். பாபாவின் அருளால்தான் தன்னால் ஆற்றினைக் கடக்க முடிந்தது என்பதை அறிந்து அங்கேயே பாபாவுக்கு மனதார நன்றி கூறினார்.
No comments:
Post a Comment