Sunday, January 25, 2015

Temple 16 : தாண்டிக்குடி முருகன்!


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
ழநிக்குக் காவடி எடுத்துச் சென்று வழிபட்ட பிறகு, தாண்டிக்குடி முருகப்பெருமானையும் வந்து தரிசித்தால்தான் விரதம் முழுமை பெறும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை.
 
திண்டுக்கல் மாவட்டத்தில், தாண்டிக்குடி மலைப்பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீபாலமுருகன் கோயில். திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில், சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஆலயம். வத்தலகுண்டில் இருந்தும் பஸ் வசதி உள்ளது.
 
போகர் முனிவருக்கு முருகப் பெருமான் காட்சி தந்து அருளியதுபோல, கற்பக மகா முனிவருக்கு கந்தக் கடவுள் காட்சி தந்தருளிய தலம் இது என்கிறார்கள்.
 
ஒருமுறை, மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பகுதிக்கு குறிசொல்ல வந்த  பன்றி மலை சாமியார் என்ற மகான், மாட்டுத் தொழுவமாகத் திகழ்ந்த ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி 'இது முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் இடம். உடனே, இங்கு முருகனுக்குக் கோயில் கட்டுங்கள்’ என்றார். மக்கள், அந்த இடத்தை உடனே சுத்தம் செய்தார்கள். அங்கே, ஏற்கெனவே கோயில் இருந்ததற்கான சுவடுகள் தெரிந்தன. அதையடுத்து, கற்பக மகா முனிவர் வழிபட்ட இடம் அது என்பது தெரிந்து, பூரித்துப் போனது ஊர். அந்த ஊர் தாண்டிக்குடி எனப்படுகிறது.
 
அதேபோல், தல வரலாறாக இன்னொன்றும் சொல்வார்கள். அகத்திய முனிவரின் ஆணைப் படி, திருக்கயிலாயத்தில் இருந்து இரண்டு மலை களைத் தூக்கி வந்தான் இடும்பன்.
அந்த இரண்டு மலைகளையும் அவன் பழநியில் வைத்துச் சற்றே இளைப்பாற, அப்போது பாலமுருகனாக வந்த முருகக்கடவுள், ஒரு மலையின்மீது ஏறி அமர்ந்து கொண்டார். அதன் பிறகு, அந்த மலையை இடும்பனால் அசைக்கக்கூட முடியவில்லை. அதுவே பழநிமலை. இன்னொரு மலையை எடுத்துச் சென்றார் இடும்பன். அதுவே தாண்டிக்குடி மலை என்கிறது ஸ்தல புராணம். பழநிமலையை சிவகிரி என்றும், தாண்டிக்குடி மலையை சக்திகிரி என்றும் போற்றுகின்றனர் பக்தர்கள்.
 
கோயிலின் மூலவர் மற்றும் உத்ஸவர் இரண்டு பேருமே கொள்ளை அழகுடன் தரிசனம் தருகின்றனர். மாதந்தோறும் கிருத்திகையில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஆடிக் கிருத்திகை இங்கே மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது, தேரில் பிராகார வலம் வரும் முருகனைத் தரிசித்தால், பிள்ளை வரம் கிடைக்கப் பெறலாம், தடைகள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம்.  
 
இந்தத் தலத்தில் தைப் பூசத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சுற்றுவட்டார ஊர்களில் இருந்து காவடி ஏந்தியும், பால் குடம் எடுத்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து முருகப் பெருமானை தரிசனம் செய்வார்கள்.
 
அதேபோல், பழநிக்குக் காவடி எடுத்துச் சென்று வழிபட்ட பிறகு, தாண்டிக்குடி முருகப்பெருமானையும் வந்து தரிசித்தால்தான் விரதம் முழுமை பெறும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை.
தைப்பூச நாளில், குடம் குடமாக பாலபிஷேகம் முதலான சகல அபிஷேகங்களும் நடைபெறும். ராஜ அலங்காரத்தில் முருகக் கடவுளைக் காணக் கண் கோடி வேண்டும்!
 
இங்கே பங்குனி உத்திரமும், வைகாசி விசாகமும் சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன. கந்தசஷ்டியில் விரதமிருந்து வழிபட்டால், நம் கஷ்டமெல்லாம் தீரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
 
இடும்பர், சித்தர்கள், கால பைரவர், கணபதி, நவகிரகங்கள் மற்றும் நாகருக்கு என தனித் தனி சந்நிதிகள் அமைந்துள்ளன.  இங்கு, கோயிலுக்கு அருகில் விபூதிக்குழி உள்ளது. பூமியில் இருந்து இயற்கையாகவே கிடைக்கும் இந்த விபூதிப் பிரசாதம் இங்கே விசேஷம்!
 
தினமும் காலை 7 முதல் இரவு 7 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.

Sunday, January 4, 2015

Temple 15 : தஞ்சை பெரிய கோயிலில் புதைந்திருக்கும் ரகசியம் !

தஞ்சை பெரிய கோயிலில் புதைந்திருக்கும் ரகசியம் !


உலகின் பாரம்பரியச் சின்னமும் இந்தியாவின் பெருமையுமான தஞ்சைப் பெரிய கோயில் முழுக்க முழுக்க மணல் மீது கட்டப்பட்டுள...்ளது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். 2010-ம் ஆண்டு நடந்த பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது கருவறையில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது.

மூன்று நாட்கள் தொடர்ந்து துளையிட்டதில் சுமார் மூன்று லாரி அளவுக்கு மணல் வந்தது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த கோயில் கட்டிடக் கலை நிபுணர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி நிறுத்தப்பட்டது. இதுகுறித்து கோயில் கட்டிடக் கலைஞரும் ஆய்வாளருமான பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

கீழே இரு மடங்கு சுமை

பெரிய கோயில் வடிவமைப்பையும் அதன் தரைப்பகுதியையும் சில ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு செய்தோம். அதில் கோயிலின் அஸ்திவாரம் மரபுவழி கட்டுமானமான ஆற்று மணல் படுகையைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அதாவது, தரையின் மேற்பகுதியில் இருக்கும் கல்லால் ஆன கோயில் கட்டுமானத்தைவிட இரு மடங்கு சுமை கீழே இருக்க வேண்டும்.
அதன்படி இயற்கையாக அங்கிருந்த சுக்கான் பாறையை தொட்டியாக வெட்டி அதில் பரு மணலை நிறைத்து அதன் மீது கோயிலைக் கட்டியிருக்கிறார்கள். கருங்கல் தொட்டி, மணல் விலகாமல் இருக்க உதவும். அதேசமயம், மணல் இயல்பாக அசைந்துகொடுக்கும் தன்மை உடையது. பூமித் தகடுகளின் எதிர்பாராத அசைவுகளின்போது மணலின் அசைந்து கொடுக்கும் தன்மையால் மேற்பகுதியில் இருக்கும் கட்டுமானம் விலகாது. அதாவது, பூகம்பம் வந்தாலும் கோயிலுக்கு எந்த பாதிப்பும் நேராது.

தலையாட்டி பொம்மை போல..

தஞ்சை பெரிய கோயிலின் ஒரு கன அடி கல்லின் எடை 70 கிலோ. தோராயமாக கோயிலின் எடை ஒரு லட்சம் டன். அதனை ஒப்பிடும்போது அஸ்திவாரமாக சுமார் ஒரு கோடி கன அடி பருமணலை கல்தொட்டியில் நிரப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இதன்மூலம் பூமித் தகடுகளின் அசைவின்போது மணல் அஸ்திவாரம் தன்னைத்தானே சமப்படுத்திக்கொள்ளும். இதனை zero settlement of foundation என்பர். இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் எனில் தலையாட்டி பொம்மையின் தொழில்நுட்பத்துக்கு ஒப்பானது. அசையுமே தவிர விழாது. தலையாட்டி பொம்மைகளின் பூர்வீகமும் தஞ்சாவூர் என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.
இயல்பிலேயே கருங்கல் கட்டுமானங்களுக்கு மணல் அஸ்திவாரமே பொருத்தமானது. அதனால்தான் பெரும்பாலான கடல் கட்டுமானங்களில் கருங்கற்களும் ஆற்று மணலும் இடம்பெறுகின்றன. 2010-ம் ஆண்டு கோயிலுக்குள் ஆழ்துளைக் கிணறு தோண்டியபோது அஸ்திவாரம் மணல் என்பதாலேயே அங்கு சத்தம் வரவில்லை. அங்கு வெளியேறிய மணலில் மண் மற்றும் பாறைத் துகள் எதுவும் இல்லை. 350 அடி ஆழத்துக்கு கீழே தோண்டிய பிறகுதான் களிமண் வெளியேறியுள்ளது.
இந்த மணல் தஞ்சாவூர் முகத்துவாரப் பகுதிக்கான மணல் அல்ல. தஞ்சாவூர் பகுதியில் இருப்பது சமதளத்தில் ஓடும் காவிரி ஆற்றுப் பகுதியின் குறுமணல். ஆனால், கோயிலின் அடியில் கிடைத்தது, அதைவிட மூன்று மடங்கு பெரிய பருமணல். இது மலைகளில் பாய்ந்தோடும் காட்டாறுகளில் படியும் மணல். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காட்டாற்றுப் படுகைகளில் இருந்து இந்த மணலைக் கொண்டுவந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சிலை, நாணயங்கள் இருக்கலாம்

நம் மன்னர்கள் பிரமாண்டமான கோயில்களை கட்டியது காட்சிக்காகவும் பக்திக்காகவும் மட்டும் அல்ல.
அன்னியர்களால் நமது வரலாறு அழியாமல் இருக்கவும், பொக்கிஷங்களை பாதுகாக்கவும்தான் பிரமாண்டமான கோயில்களைக் கட்டியுள்ளனர். அப்படி பிரமாண்டமாக அமைத்தால்தான் அதன் அடியில் பெரும் நிலவறைகள் வடிவமைத்து பொருட்களைப் பாதுகாக்க முடியும்.
எனவே, பெரிய கோயிலின் அடியில் நாணயங்கள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், சிலைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதன்மூலம் தென் கிழக்கு ஆசியாவை வென்ற தமிழனின் மற்றொரு பரிமாணத்தையும், மணல் அஸ்திவாரக் கட்டுமானக் கலையின் வரலாற்றையும் நாம் தெரிந்துகொள்ளலாம். கோயிலில் அகழ்வாராய்ச்சி நடத்தித்தான் இதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. செயற்கைக்கோள் உதவியுடன் ரிமோட் சென்சார் மற்றும் Ground penetrating radar தொழில்நுட்பம்மூலம் பூமிக்குள் ஊடுருவி படங்களை எடுத்து ஆய்வு செய்யலாம்” என்றார்.
நம் கலைப்பொக்கிசம் தஞ்சைப் பெரிய கோயில் எப்படி கட்டப்பட்டது ???? என்ற தகவல் உங்களுக்காக.
படிப்பதற்கே தலை சுற்றுகிறது ,இது எப்படி சாத்தியமானது ? ? ! !

படிப்பதற்கு பெரியதாக உள்ளது என பாதியில் நிறுத்திவிட வேண்டாம்.. இதை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ளவேண்டும் .
தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏட்படுத்தியவர்கள் விஸ்வப் பிரம்மகுல சிற்பிகளே மன்னர் கட்டியது மன்னர்கட்டியது என மார்தட்டும் எந்தமன்னனாவது ஒரு சிறு கல்லைத் தூக்கியதாக வரலாறுண்டா ஒருகல்லை அது எந்தபதத்தில் உள்ளது என , தெரியும்

தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டு உள்ளன . எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் மற்றும் நவீன தொழிநுட்பங்கள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.

பெரிய கோயில் அளவுகோல்…

எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை
1, விரல்,
2, மானாங்குலம்,
3, மானம் என்று அழைத்தனர்.
4, இருபத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது.
5, ஒரு முழமே இருவிரல் நீட்டித்து(நீளம்) பதினாறு விரல் அகலத்து(அகலம்), ஆறுவிரல் உயரத்து (உயரம்)பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உயரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.

தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறைவெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கத . அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.
இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள்

1.2 மீ ஷ்
1.2 மீ சதுரத்தில்
0.6 மீ ஷ்
0.6 ஷ்
0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகளை தீர்மானித்திருக்கிறார்கள் . ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு
180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின்,13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.
அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.கருவறையின் நிலகீழ் அமைப்பும் நிலத்தில் நீர் ஊற ஆரம்பிக்கும் இடத்திலிருந்து கருவறை அத்திவாரநிலபீடம் எனும் சிட்பசாஸ்திர அளவு முறை ஆலயம் கட்டும் போதும் பயன்படுகிறது என்பது ஒரு முக்கியகுறிப்பு ஆகும்,
சாரங்களின் அமைப்பு

கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் – ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் உபயோகப்படுத்தப்ப ட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் – சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.
இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம்,
கோபுரம் உயர உயர
தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்ட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.

இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் நேர்ச்சட்டங்கள் , குறுக்குச் சட்டங்கள் அனைத்தும் முட்டுப் பொருத்துகள் மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ளஉதவின.
அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.

மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்ட . விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்ட என்பது குறிப்பிடத்தக்கது . !!



‘இராஜராஜேச்சரம்’ – பெயர்க்காரணம்.

“கோயில் என்பது சைவர்களுக்குத் தில்லை பொன்னம்பலத்தையும், வைணவர்களுக்குத் திருவரங்கத்தையும் குறிப்பது போலப் பொது மக்களுக்குப் ‘பெரிய கோயில்’ என்றால் அது தஞ்சை இராஜராஜேச்சரமே ஆகும்.”

“பெரிய கோயில், ‘ப்ருஹத் ஈஸ்வரம்’ எனும் வடமொழிப் பெயரால் ‘பிரஹதீஸ்வரம்’ என்றும், பெரிய லிங்கத்திருமேனி இடம் பெற்றுள்ளது என்பதால் ‘பிரஹதீஸ்வரர் ஆலயம்’ எனவும் அழைக்கப்படலாயிற்று. தென்னாட்டுக் கோயில்களுக்குள் மிக உயர்ந்த விமானத்தை உடையதால்தான் ‘பெரியகோயில்’ என்ற சிறப்புப் பெயர் பெற்று விளங்குகிறது. இக்கோயிலின் ஸ்ரீவிமானம் தக்ஷிணமேரு எனப்பெயர் பெற்றுத் திகழ்கிறது.”

சென்ற நூற்றாண்டில் இத்திருக்கோயிலின் வரலாறு மக்களால் தெளிவாக அறியப்பட்டிருக்கவில்லை. சைவர்களால் திருவிசைப்பா படிக்கப்பட்டு வந்தபோதும், அதிலுள்ள இராஜராஜேச்சுரம் என்னும் தொடர் வரலாற்று உணர்வோடு புரிந்து கொள்ளப்படவில்லை.

இச்சிவாலயத்தைப் பற்றிப் பலவகையான கற்பனைக் கதைகள் ஏட்டிலும், நாட்டிலும் வழங்கி வந்தன.
“இக்கோயிலைக் கட்டியவர் என்று பலருடைய பெயர்கள் தவறாகப் பரவியிருந்தன. 1892இல் வெளியான ‘தென்னிந்திய கல்வெட்டுக்கள்’ என்னும் நூலில், “பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம்” எனும் தொடரால்தான் இது மாமன்னன் ராஜராஜன் கட்டிய செய்தி உறுதி செய்யப்பட்டது. இதுதவிர இந்தக் கோயிலைப் பற்றிய வேறு பல செய்திகளும் தவறாகவே சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. அவை:- நிழல் கீழே விழாத கோபுரம்; வளர்ந்து வருகின்ற நந்தி, சாரப்பள்ளம் எனும் கிராமத்திலிருந்து சாரம் கட்டி கோபுர உச்சிக்கு 80 டன் எடையுள்ள பிரமரந்திரக்கல் ஏற்றப்பட்டது என்பது போன்ற பல செய்திகள் பொய்.”

“மன்னன் ராஜராஜனுக்கு இந்த ஆலயம் எழுப்பிட பலர் உதவியிருக்கிறார்கள். இந்தக் கோயிலால் ஆன்மீகம் வளர்ந்தது, கலைகள் செழித்தன; சோழநாட்டின் பொருளாதாரம் சிறந்தது என்பது போன்ற பல சாதனைகளைச் சொல்லி மகிழலாம். ராஜராஜனுடைய பெருந்தன்மையை விளக்கும் ஒரு செய்தி, இவ்வாலயம் எழுப்ப அவனுக்கு உதவிய அத்தனை பேருடைய பெயர்களையும் கல்வெட்டில் எழுதி வைத்திருக்கிறான்.”

‘இராஜராஜேஸ்வரம்’ எழும்பியுள்ள தஞ்சாவூர் பகுதி முழுவதும் ஆறுகள், வாய்க்கால்கள், வயல்வெளிகள் என பாறைகளே இல்லாத சமவெளிப் பிரதேசம். இங்கு பெரிய பெரிய கற்பாறைகளைக் கொண்டுவந்து தரை கெட்டியாகவுள்ள செம்மண் பிரதேசத்தில் இக்கோயிலை அமைத்துள்ளதே இவனது பொறியியல் திறமைக்குச் சான்று. இங்கு உபயோகப்படுத்தப்பட்ட பாறைகள் அனைத்தும் புதுக்கோட்டையை அடுத்த குன்னாண்டார்கோயில் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டவை என்பது
முனைவர் குடவாயில் அவர்களின் கருத்து.

நுழைவுக் கோபுரம் – கேரளாந்தகன் திருவாயில்

keralanthakangate1இவ்வாலயத்தின் நுழைவு வாயிலாகத் திகழ்வது ‘கேரளாந்தகன் திருவாயில்’ எனப்படும். மாமன்னன் இராஜராஜன் தான் முடிசூடிய நான்காம் ஆண்டில் ‘காந்தளூர்ச்சாலை கலமருத்தருளிய கோஇராஜகேசரிவர்மன்’ என்று பெயர்பெற்றான். பொ.பி.988ஆம் ஆண்டில் கேரளத்தில் திருவனந்தபுரம் அருகிலுள்ள காந்தளூர்ச்சாலையை வென்று இப்பட்டப்பெயர் பெற்றான். (பொ.பி – பொது சகாப்தத்திற்குப் பின், CE)

இந்த கேரளாந்தகன் திருவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் அடுத்து வருவது ‘இராஜராஜன் திருவாயில்’. அதையும் தாண்டி உள்ளே சென்றால் இருப்பது ‘நந்தி மண்டபமும்’ மாபெரும் நந்தி உருவமும். இப்போது அங்குள்ள பெரிய நந்தி நாயக்க மன்னர்கள் காலத்தில் வைக்கப்பட்டது. மன்னன் ராஜராஜன் நிறுவிய பழைய நந்தி இப்போதும் ‘வாராஹி’ அம்மன் சந்நிதிக்கருகில் வைக்கப்பட்டிருக்கிறது.

ராஜராஜன் எழுப்பிய மாபெரும் கோயிலுக்குள் நுழைவதற்கு முன் நாம் தாண்டிச் செல்லவேண்டிய இவ்விரு கோபுரங்களின் சிறப்பை அறிய வேண்டுமானால் குடவாயில் அவர்களின் நூலைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். இனி கோயிலின் சிறப்பினைப் பார்ப்போம்.

திருக்கோயிலின் அமைப்பு

ஆலயத்தின் மதிற்சுவரோடு இணைந்து நாற்புறமும் திருச்சுற்று மாளிகை அமைந்திருக்கிறது. அதன் வடபுற விமானத்துக்கருகே சண்டீசரின் சந்நிதி உள்ளது. இவ்வளவுதான் அந்த ஆலயத்தின் பழைய தோற்றம். திருச்சுற்று மாளிகையில் பல பரிவார தேவதைகளுக்கான சிறு சந்நிதிகள் உண்டு. பழைய காலத்தில் வடக்குப் புறம் ஓர் அம்மன் ஆலயம் இருந்ததாகத் தெரிகிறது. “திருச்சுற்று மாளிகையில் ஆலயத்து பரமேஸ்வரி” என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது.

ஆலயத்தின் மகாமண்டபம், அர்த்தமண்டபம் இவைகளைத் தாண்டிச் சென்றால் ஆலயத்தின் கற்றளி விமானம் இருக்கிறது. “இந்த ஸ்ரீவிமானம் 30.18மீ அளவுடைய உயர்ந்த அதிஷ்டானத்தின் மேல் கருவறை நடுவே திகழ, அதனைச் சுற்றி நான்கு புறமும் வாயில்களுடனும் ஓர் சுற்று அறையுடனும் திகழ்கின்றது. இராஜராஜேச்சரமுடையார் எனும் மிகப்பெரிய லிங்கத் திருவுருவம் நடுவே திகழ, ஒரே வாயிலுடனும் 11அடி கனமுடைய சுற்றுச் சுவர்களுடனும் கருவறை உள்ளது. கருவறைக்கு வெளிப்புறம் அமைந்துள்ள அறை 6அடி அகலமுடையதாக விளங்குகிறது. இங்கு புறச்சுவர்களின் நான்கு பக்கச்சுவர்களின் அகலம் 13 அடி கனமுள்ளது. சிவலிங்கத்துக்கு மேலே விதானம் மரத்தாலானது. இது பிற்காலத்தில் அமைக்கப்பட்டது. விமானம் உட்புறம் கூடாக அமைந்திருக்க அதன் இருண்ட பகுதிக்குள் வெளவால்கள் அடைந்துகொண்டு லிங்கத்தின் மேல் அசிங்கம் செய்துவந்த காரணத்தால் அதனைத் தடுக்கும் பொருட்டு மர அடைப்பு இடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கருவறைக்கு மேல் இரண்டாம் தளம் உள்ளது. மகாமண்டபம் வழியாகப் படியேறிச்சென்றால் இந்த தளத்துக்குச் செல்லலாம். இங்கே ஒரு திருச்சுற்று இருக்கிறது. இங்கு இருபக்கச் சுவர்களும் மேலே போகப்போக ஒன்றுகூடி 30அடியுள்ள கனமான சுவராக ஆகிவிடுகிறது. இந்த இடத்திலிருந்து விமானம் உட்புறம் பிரமிட் வடிவில் குவிந்து 13 அடுக்குகளாக உயர்ந்து கடைசியாக 8.7மீ பக்க அளவுடைய ஒரு சதுரத் தளத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த தளத்தில் எட்டு நந்திகள் உள்ளன. மையத்தில் 20மீ சுற்றளவுள்ள பெரிய பாறைபோன்ற அமைப்பு, அதன் மேல் சிகரம் அது சுமார் 12 அடி உயரமுள்ளது. இந்த விமானம் தரையிலிருந்து கலசம் வரை 60.40 மீ உயரமுள்ளது.

இந்த விமானத்தின் உச்சியில் உள்ள பாறைபோன்ற அமைப்பு ஒரே கல்லால் ஆனது 80 டன் எடையுடையது என்றெல்லாம் பேசப்பட்டாலும், அது உண்மையல்ல என்பது முனைவர் குடவாயில் அவர்களின் முடிவு. இந்தக் கல்லை ஒரு கிழவி கொடுத்தாள் என்பதெல்லாம் கற்பனை கதை என்றும் அவர் கூறுகிறார். இந்த பாறைவடிவம் பல கற்களை இணைத்து உருவாக்கப்பட்டதாம். இருந்தாலும் ஒரே கல் போன்ற தோற்றமளிக்கும் வகையில் அவ்வளவு நேர்த்தியாக இவை கோர்க்கப்பட்டிருப்பது வியப்புக்குரியது.

அற்புதமான துவாரபாலகர்கள்

பெரிய நந்தியிலிருந்து மகாமண்டபத்துள் நுழையுமுன் இருக்கும் முன்மண்டப வாயில் இரண்டு துவாரபாலகர்கள் உண்டு. ஒரு துவாரபாலகரின் காலடியில் ஒரு மலைப்பாம்பு யானை ஒன்றை விழுங்கிக்கொண்டிருக்கிறது. இது ஓர் அரிய உட்பொருளை விளக்குகிறது என்று ஆசிரியர் கூறுகிறார். இந்த ஆலயமே ஒரு மாபெரும் தத்துவப் படைப்பு என்றும், இந்தச் சிற்பங்கள் அப்படிப்பட்ட தத்துவங்களை விளக்குவன என்றும் குடவாயில் கூறுகிறார்

கோவில் அதிசயங்கள்..!

கோவில் அதிசயங்கள்..!




அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர்.

ஆனால் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப...்பு உண்டு!

அவைகளில் சில:

1. உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம். - நடராஜ கோயில்

2. கும்பகோணம் அருகே “தாராசுரம்” என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில்உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம் தெரியும்.

3. தர்மபுரி மல்லிகார்ஜுன கோவிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின் அடி பூமியில் படியாது.

4. கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில் இரட்டை நடராஜர் தரிசனம் செய்யலாம்.

5. கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்தலம் கும்பகோணம் அருகே வெள்ளியங்குடி. 108 திவ்யதேசத்தில் இங்குமட்டும் இது போல் காட்சிதருகிறார்.

6. நாச்சியார் கோவில் கல்கருடன் சன்னதியில் 4 பேர் தூக்குவார்கள் பின்பு 8,16, கோவில் வாசலில் 64 பேர் தூக்கி வருவார்கள் கருடனும் முகத்தில் வேர்வை துளிர்க்கும்.

7. ஸ்ரீபெரும்புதூரில் உள் ராமானுஜர் உருவம் விக்ரஹமோ, வேறு உலோகப் பொருளால் ஆன வடிவமைப்போ இல்லை.குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் ஆனது.

8. திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோயிலில் உள்ள வில்வமரத்தில் லிங்க வடிவில் காய் காய்க்கிறது.

9 கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் “பஞ்சவர்ணேஸ்வரர்” என்று பெயர்.

10. விருதுநகர், சொக்கநாதன்புத்தூரில் உள்ள தவநந்திகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்திக்கு கொம்போ, காதுகளே இல்லை.

11. ஆந்திராவில் சாமல் கோட்டை அருகே உள்ள 3 பிரதான சாலைகளில் சந்திப்பில் உள்ள 72 அடி ஆஞ்சநேயர்சிலையின் கண்களும்-சில நூறுமைகளுக்கு அப்பால் உள்ள பத்ராசல ஆலயத்தில் ஸ்ரீராமன் திருவடிகளும் ஒரே மட்டத்தில் உள்ளன.

12. வேலூர் அருகே உள்ள விருஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ள கோயில் தூணின் தென்புறம் அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6முதல் 12 வரையும் எண்கள் செதுக்கியுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தில் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியுன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுதான் அப்போது மணி ஆகும்.

13. சென்னை-திருப்பதி சாலையில் ஊத்துக் கோட்டைதாண்டி நாகலாபுரம் என்ற ஊரில் உள்ள ஸ்ரீவேத நாராயண பெருமாள் தலையிலிருந்து இடுப்புவரை மனித உருவம், கிழே மீன்வடிவம் கொண்டுள்ளார்.

14. தருமபுரி – பாப்பாரப்பட்டி {16கி.மீ} இருக்கும் ஸ்ரீ அபிஷ்டவரதர் பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள்
பெண்வடிவில் உள்ளது.

15. மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலில் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு கோபுரங்கள் கிடையாது.

16. கும்பகோணம் சாரங்கபாணி கோவில் கோமளவல்லி தாயாருக்கு படி தாண்டா பத்தினி என்ற பெயரும் உண்டு - பெருமாளோடு எக்காலத்திலும் வெளியே வராத காரணத்தால்

Saturday, January 3, 2015

Temple 14 Sri Subrahmanya Swamy Thirukovil, Tiruchendur

Śrī Subrahmanya Swami Devasthanam, Tiruchendur
 
The great and noble abode of Lord Subrahmanyam measures 300 feet north to south and 214 feet east to west.  The principal entrance of this great temple faces south, and opens into the first temple prakāra. It is Sivili Mantapa. It is a series of four long corridors running around the still inner second prakāra flanked on either with the familiar rows of columns of yalis. The Sivili Mantapa produces a fine effect of symmetry and grandeur. This prakāra 292' 6" north to south and 190' east to west branches off both ways to the west and the east of this grand portal.  The western portion has a number of rooms where are lodged a few vahanam, and in another portion in the temple stores. On the opposite row is the shrine of Dakshinamurti. As the corner is reached there is a mantapa where the processional deities are given the festival alankara before starting out and when they return thereto after the processions. Here is also conducted the annual Tirukkalyānam for Valli on the Panguni Uttiram day.
 
The seashore temple of Subrahmanyam at Tiruchendur is one of the delightful spots sanctified and venerated by every Hindu. As one of the first spiritual centres for the salvation of man, His shrine has been an attraction for Hindus for ages. This sacred house of God is in the extreme southwest of the Indian peninsula. The rising sun bows in adoration of it each morning as he rises from the rippling expanse of the ocean, and spreads light and life over every living object.
 
Bordered by the sea on the East and the North, the temple walls on these sides are washed by the foaming waves of the Gulf of Mannar. The date of the temple is hidden in the Puranic past. The nucleus of the structure however has been here for more than 2,000 years as the Tamil Classics inform us.
 
Lord Muruga's association with Tiruchendur is highly significant. It is described in extenso in His epic, the Skanda Puranam. The young Muruga as the Devasenāpati vanquishes evil in the form of Surapatuma. The Tamils have ever since been celebrating the event as an annual festival during Skanda Sashti.
 
Tiruchentil means as it does, the House of Victory. It borders the sea and has all the natural charm of a hero's fortress. It is verily a haven of Peace and Bliss. The Tamils in this part of the peninsula have such an attraction for the place and its presiding Lord Arumuga Nayinar.
 
An attempt is here made to give His bhaktas all over a close account of His shrine at Tiruchendur; and with this additional desire of impressing that the Temple is one worthy of a pilgrimage in this life. The divine inspiration and His grace that the bhakta is sure to secure will more than recompense his labours.
 
 
Tiruchendur Sri Senthil Andavar
 
 
Devasthanam roof looking east
 
 
 
 
 

தலவரலாறு: 

தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம்
முறையிட்டனர்.
அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில்
இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார்.
அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார்.
பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று,
சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார்.
 
இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி,
தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார்.
அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார்.
அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார்.
 
அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார்.
அவன் கேட்கவில்லை. பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று,
அவனை வதம் செய்தார்.
வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி
வேண்டிக்கொண்டார்.
அதன்படியே முருகனும் இங்கே தங்கினார்.
 
பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோயில் எழுப்பினார்.
முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர்,
"செயந்திநாதர்' என அழைக்கப்பெற்றார்.
பிற்காலத்தில் இப்பெயரே "செந்தில்நாதர்'
இப்பெயரே "செந்தில்நாதர்' என மருவியது.
தலமும் "திருஜெயந்திபுரம்' (ஜெயந்தி - வெற்றி) என அழைக்கப்பெற்று,
"திருச்செந்தூர்' என மருவியது.
 
 
 

 

 
                  மூலவர்:சுப்பிரமணியசுவாமி
           
உற்சவர்
:
சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள்
 
அம்மன்/தாயார்
:
வள்ளி, தெய்வானை
 
தல விருட்சம்
:
-
 
தீர்த்தம்
:
சரவணபொய்கை
 
ஆகமம்/பூஜை
:
-
 
பழமை
:
1000-2000 வருடங்களுக்கு முன்
 
புராண பெயர்
:
-
 
ஊர்
:
திருச்செந்தூர்
 
மாவட்டம்
:
 
மாநிலம்
:
தமிழ்நாடு
 
 
 



gallry
Tiruchendur Swamy




 
 
 
 
 


 

 
 
 

Thursday, January 1, 2015

Temple 13 SriRangam, Trichy, Tamil Nadu, India



ஆழ்வார்களால் பாடல் பெற்ற திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம். இது,108 திவ்யதேசங்களில் ஒன்று. இக்கோவில் ஒரு காலத்தில், 'திருச்சி ஸ்ரீரங்கநாதன் பள்ளி' என்று அழைக்கப்பட்டது. மகாவிஷ்ணு பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளித்ததால், இப்பெயர் உண்டானது என்பர். இதில், 'ஸ்ரீ' என்னும் எழுத்தை, தமிழில், 'திரு' வென மாற்றி, 'திருச்சீரங்க நாதன்பள்ளி' என்று அழைத்தனர். பின்னாளில், இப்பெயர் திருச்சிராப்பள்ளி ஆகி, திருச்சியாக சுருங்கி விட்டது என்றும்,

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலை, 'திரிசிராமலை' என்றதால், திருச்சியாக மாறியதாகவும் சொல்வர்.

ரங்கநாதப்பெருமாள் பள்ளி கொண்ட கோலத்தில் இருக்கும் விக்ரகத்தை வழிபட்டு வந்தார் பிரம்மா. அப்போது பூலோகத்தில், சூரியகுல மன்னன் இக்ஷ்வாகு, பிரம்மாவை நோக்கி தவம் இருந்தான். மன்னனின் தவ வலிமையைக் கண்டு மனம் மகிழ்ந்த பிரம்மா, 'என்ன வரம் வேண்டும்...'எனக் கேட்டார்.
'பிரம்மதேவா... உம்மால் பூஜிக்கப்படும் பெருமாள் சிலையே எனக்கு வேண்டும்...' என்று வேண்டினான் மன்னன். பிரம்மாவும் மன மகிழ்வுடன், பெருமாளை அவனிடம் கொடுத்தார். இக்ஷ்வாகுவின் வம்சாவழியில் வந்தவரே ராமபிரான்.

ராமர், தன் பட்டாபிஷேக பரிசாக அந்தச் சிலையை, விபீஷணனிடம் கொடுத்தார். அதை விபீஷணன் இலங்கை கொண்டு செல்லும் போது, வழியில் காவிரிக்கரையில் வைத்து, நதியில் நீராடினார். குளித்து முடித்து எடுத்தபோது சிலையைத் தூக்க முடியவில்லை. அந்த இடமே, ஸ்ரீரங்கம் ஆனது.
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே விபீஷணன், சிலையை வைத்த இடத்தில் தான் இப்போது கோவில் உள்ளது.
இங்கு, வைகுண்ட ஏகாதசி முக்கியத் திருவிழா. அன்று, சொர்க்கவாசல் திறக்கப்படும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் ஏகாதசி. அதனால், இவ்விரதத்திற்கு பாவம் போக்கும் சக்தி உண்டு என்பர்.
ஏகாதசி விரதம் இருப்பவர்கள், முதல் நாளான தசமி அன்று ஒருபொழுது உண்ண வேண்டும். ஏகாதசியன்று உண்ணாமலும், உறங்காமலும் விரதம் இருக்க வேண்டும். அன்று துளசி பறிக்கக் கூடாது. பூஜைக்கு வேண்டிய துளசியை முதல் நாளே பறித்துவிட வேண்டும். மறுநாளான துவாதசியன்று சூரியோதயத்திற்குள் நீராடி, துளசிதீர்த்தம் அருந்த வேண்டும். 'பாரணை' என்னும் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை உண்ண வேண்டும். அகத்திக்கீரை, நெல்லிக்காய் மற்றும் சுண்டைக்காய் உணவில் இடம்பெறுதல் அவசியம். அகத்திக்கீரையில் பாற்கடல் அமுதமும், நெல்லி மற்றும் சுண்டைக்காயில், லட்சுமியின் அருளும் இருப்பதாக ஐதீகம். அன்று பகலில், 'நாராயண நாராயண' என்று முடிந்தவரையில் ஜெபிக்க வேண்டும்.
வைகுண்ட ஏகாதசி, வாழும் காலத்தில் செல்வத்தையும், வாழ்வுக்குப் பின், பரமபதத்தையும் தரவல்லது. பூலோக வைகுண்டம் என புகழப்படும் ஸ்ரீரங்கத்தில் அருள்பாலிக்கும் ரங்கநாதரின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

 

Temple 12 : ஆசியாவின் பிரமாண்ட விநாயகர்!

கோவை, புலியகுளம் பகுதியில் அமைந்து உள்ளது ஸ்ரீமுந்தி விநாயகர் ஆலயம். இங்கே, அருள்பாலிக்கும் விநாயகப் பெருமான், ஆசியாவிலேயே மிகப்பெரிய விக்கிரகத் திருமேனியர் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்.
 
இந்த ஆலயம், அந்தப் பகுதி மக்களால், கடந்த 98-ம் வருடம், ஜகத்குரு ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  
 
எதுவாக இருப்பினும், என்ன இன்னல் வந்திடினும் முன்னின்று வந்து அனுக்கிரகம் செய்து வைப்பாராம் இவர். எனவே, இவருக்கு ஸ்ரீமுந்தி விநாயகர் எனும் திருநாமம் அமைந்ததாகச் சொல்வர். அனைத்துக் கடவுளருக்கும் முதன்மையானவர் என்பதாலும் இந்தத் திருநாமம் இவருக்கு!
 
'முந்தி விநாயகர் சுமார் 19 அடி 10 அங்குல உயரமும் 11 அடி 10 அங்குல அகலமும், 8 அடி கனமும் கொண்டவராக, சுமார் 190 டன் எடை கொண்டவராகத் திகழ்கிறார். இன்னொரு சிறப்பு... இந்தச் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது. விநாயகரின் நெற்றி மட்டுமே இரண்டடி அகலம். துதிக்கை வலம் சுழிந்து காட்சி தருகிறார் பிள்ளையார். நான்கு திருக்கரங்கள். வலது முன் கரத்தில் தந்தமும் பின் கரத்தில் அங்குசமும்; இடது முன்கரத்தில் பலாப்பழமும் பின் கரத்தில் பாசக் கயிறும் கொண்டு காட்சி தருகிறார். தவிர, துதிக்கையில் மகாலட்சுமியின் அம்சமான அமிர்த கலசத்தைத் தாங்கியபடி, தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீவிநாயகக் கடவுள். அவரின் கிரீடத்திலும் தாமரை மேல்நோக்கி விரிந்திருப்பது போன்ற வேலைப்பாடு மிக அழகு!
 
வாசுகிப் பாம்பை, தன் வயிற்றில் கட்டிக் கொண்டிருப்பதால், நாக தோஷத்தை நீக்கி அருள்கிறார் ஸ்ரீகணபதி பெருமான். நாக தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து ஸ்ரீவிநாயகரை வணங்கினால், தோஷம் நீங்கி, வளமுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை'' என்கிறார் கோயிலின் கார்த்திகேய குருக்கள்.  
'பிடியதன் உருவுமை கொளமிகு கரியது’ என்ற வாக்குக்கு இணங்க, அம்பாள் பார்வதியும் பரமேஸ்வரனும் யானை உருக்கொண்டு ஸ்ரீவிநாயகப் பெருமானாகத் தோன்றியது போல் காட்சி அளிக்கிறார் கணபதி. அதாவது, அவரின் வலது பகுதி, ஆண்களைப் போலவும் இடது பக்கம் பெண்களின் வடிவிலும் அமைந்து உள்ளது.
 
'சித்திரை முதல் நாள், சுமார் 3 டன் எடை கொண்ட பலவகை பழங்களால், விநாயகருக்கு அலங்கார பூஜை நடைபெறுகிறது. அந்த மாதம் முழுவதும் சிறப்பு அலங்காரம் செய்வதும் பக்தர்களுக்கு பழங்கள் விநியோகிப்பதும் சிறப்புற நடைபெறும். அதேபோல் விநாயக சதுர்த்தி நாளில், அதிகாலையிலேயே விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுவதுடன், மூன்று டன் எடை கொண்ட பல மலர்களால் ஆன மாலையை அணிவிக்கப் பட்டு, ராஜ அலங்காரத்தில் காட்சி தருவார்.'' எனத் தெரிவிக்கிறார் குருக்கள்.
விழா நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பிள்ளையாரைத் தரிசித்துச் செல்வார்கள். நவராத்திரி விழாவும் இங்கு சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீமுந்தி விநாயகரை வணங்கினால், அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும். பதினாறு வகை பேறுகளும் பெற்று, பெருவாழ்வு வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்!



 

Temple 11 திருப்பதி ‘சிலாதாரணம்’


திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் ‘சிலாதாரணம்’ என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்தப் பாறைகள் இங்கு மட்டும்தான் உள்ளன. இந்தப் பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும் இந்தப் பாறையிலிருந்து உருவாக்கப்பட்டதுதான்.

ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு வருடம் முழுவதும் பச்சைக் கற்பூரம் சாத்துகிறார்கள். இது ஒருவகை ரசாயனப் பொருள். அரிப்பைக் கொடுக்கக் கூடியது. இதை ஒரு கருங்கல் மீது தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணப் பாறைகளில் தடவினால் அவை வெடிப்பதில்லை.

எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஓர் இடத்தில் சிற்பியின் உளிப்பட்ட தடம் அதன் விளிம்புகளிலாவது தெரியும். உலோகச் சிலையானாலும் அதனை உருக்கி வார்த்த தடம் தெரியும். ஆனால், ஏழுமலையான் திருவுருவச் சிலையில் அப்படி எந்த அடையாளமும் தெரியவில்லை.ஏழுமலையான் திருமேனியில் நிறைய நுணுக்கமான வேலைப்பாடுகள் இருந்தாலும் நெற்றிச்சுட்டி, காதணிகள், நாகாபரணங்கள் எல்லாம் செதுக்கினாற்போலவே தோன்றாது; மாறாக புதிதாக செய்து போடப்பட்ட நகைகள் போலவே மெருகு மங்காமல், பளபளப்பாக இருக்கின்றன.

ஏழுமலையான் திருவுருவச் சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் கொண்டதாக இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாலை 4:30 மணிக்கு குளிர்ந்த நீர், பால், திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன், வெப்பம் காரணமாக ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள்.

திருப்பதி திருக்கோயில் மடப்பள்ளி (சமையலறை) மிகவும் பெரியது. பொங்கல், தயிர்சாதம், புளியோதரை, சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மௌகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம் கேசரி, முந்திரி பருப்பு கேசரி போன்றவை தினமும் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன.

திருமலையானுக்கு தினமும் ஒரு மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் இட்டு இதை மட்டுமே நிவேதிக்கிறார்கள். இது தவிர மேலே குறிப்பிட்ட எந்த பிரசாதமும் கர்ப்பகிரகத்திலுள்ள குலசேகரப்படியைத் தாண்டிச் செல்லாது.

ஏழுமலையான் அணியும் புடவை, 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட பட்டுப் பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. ஆனால், இதனை சாத்துவதாக ஒரு பக்தர் வேண்டிக் கொள்ளலாம். அவர், திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12,500 ரூபாய் செலுத்த வேண்டும். வாரத்தில் ஒருமுறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும்தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு இப்படி வஸ்திரம் சாத்தப்படுவதைக் காண்பதற்கு அந்த பக்தர் மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

உள் சாத்து வஸ்திரம் சாத்த இருபதாயிரம் ரூபாய் கட்டணம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு இந்த உள் சாத்து வஸ்திரம் சாத்துவதைக் காண பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சீனாவிலிருந்து புனுகு, பாரீஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு, 51 வட்டில் பாலும் சேர்த்து கரைத்து அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும். காலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80 ரூபாய்.

சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்கு அனுப்பப்படுகின்றன.

ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி என்கிறார்கள். இவருடைய நகைகளை வைத்துக்கொள்ள இடமும் இல்லை; மொத்தமாக சாத்தி அழகு பார்க்க நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒருமுறை உபரியாக உள்ள நகைகளை செய்தித் தாள்களில் விளம்பரப்படுத்தி ஏலம்
விடுகிறார்கள்.

ஏழுமலையானின் சாளக்கிராம தங்க மாலை 12 கிலோ எடை கொண்டது. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோயிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் இங்கு மட்டும்தான் இருக்கிறது; வேறெங்கும் இல்லை. இதன் மதிப்பு ரூ.100 கோடி.

திருப்பதியில் உள்ள ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

வெள்ளிக்கிழமைகள் மற்றும் மார்கழி மாத அர்ச்சனைகளில் வில்வ இலை உபயோகப்படுத்தப்படுகிறது.

சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப் பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெறுகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மாவாகவும் சிவாம்சம் பொருந்தி ஈஸ்வரனாகவும் சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதி வைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதி கோயிலுக்கு வந்திருக்கிறார். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்து சாமி தீட்க்ஷிதர் ஏழுமலையான் மீது சேஷ£சல நாமம் பாடலை வராளி ராகத்தில் பாடியுள்ளார்.

அபிஷேகத்தின்போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

ஏழுமலையான் கோயிலின் தல விருட்சம் புளிய மரம்.

எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருச்சிலையிலும்கூட கையில் ஏதாவது ஒரு ஆயுதம் இருக்கும். ஆனால், ஏழுமலையான் கரத்தில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழிலக்கியத்தில் நம் முன்னோர்களால் ‘வெறுங்கை வேடன்’ என்று
போற்றப்பட்டார்.

பிரிட்டிஷார்களான சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றோர் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர். திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. அதன் பிறகு கிறிஸ்தவப் பாதிரியார்கள் சிலர் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால், அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள், அந்தக் கோயிலின் நடைமுறைப்படி நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வருமோ என்றும் கவலைப்பட்டார்கள்!

திருப்பதி அலர்மேல்மங்கைத் தாயாருக்கு அணிவிக்கப்படும், பருத்தியால் ஆன உள்பாவாடை, கத்வால் என்ற ஊரில் தயார் செய்யப்படுகிறது. செங்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். இப்படித் தயாரிக்கும்போது அவர்கள் மூன்று வேளை குளிப்பார்கள்; மது, மாமிசம் உண்ண மாட்டார்கள்.

ஏழுமலையானை வாரத்தில் 4 நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்ணுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் பாவித்து பூஜை செய்கிறார்கள்.

ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்றபடியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விட வேண்டும் என்பது இந்த புஷ்கரணியின் நீராடல் சம்பிரதாயமாகும்.

கி.பி. 1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர், பத்மாவதி தாயாருக்கு கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தௌலா என்பவரின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் கோயில் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

திருமலை திருக்கோயிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இவற்றில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி. 830 தொடங்கி 1909வரையிலான கல்வெட்டுக்களில் 50தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்களும் தமிழிலேயே உள்ளன.

Temple 10 : மாயூரநாதர் திருக்கோவில்



தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் மயிலாடுதுறையும் ஒன்று. முந்தைய சோழ நாட்டிலும், தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டத்திலும் காவிரி ஆற்றுக்கு தென்பகுதியில் அமைந்துள்ள மயிலாடுதுறைக்கு பெருமைத் தேடித்தரும் விதமாக கம்பீரமாக நிற்கிறது, அபயாம்பிகை உடனுறை மாயூரநாதர் திருக்கோவில்.

மயில் உருப்பெற்ற பார்வதிதேவி, சிவனை தரிசித்து அவரால் ஆட்கொள்ளப்பட்ட தலம். கங்கை, யமுனை போன்ற நதிகள் தங்கள் பாவச் சுமையை இறக்கி வைக்க, இந்த ஊருக்கு வந்து காவிரி நதியில் கலந்து புனிதம் பெற்றனர் என்பது தல புராண வரலாறு. இந்த ஐதீகம் காரணமாக ஐப்பசி மாதம் முழுவதும் துலா நீராடலும், ஐப்பசி 30–ந் தேதி கடைசி முழுக்கு அன்று, தீர்த்தவாரியும் நடைபெற்று வருகின்றது.

ஏகநாதராகிய சிவபெருமான் தோன்றி அருள்பாலிக்கும் அனைத்துத் தலங்களும் சிறப்புடைய தலங்கள்தான். இத்தலத்தில் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் எழுந்தருளி, திருப்பதிகம் பாடியுள்ளனர். சூதவனம், சிகண்டிபுரம், பிரும்மபுரம், தென்மயிலை, மாயூரம், மயூரம், மாயவரம் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது இந்த ஊர். பழங்காலத்தில் மயில்கள் அதிகம் நிரம்பிய பகுதியாக இந்த ஊர் இருந்துள்ளது.

மயில் வடிவில் அம்பாள் :

மயிலாடுதுறைக்கு கிழக்கே சற்று தொலைவில் செம்பனார்கோவில் அருகே பரசலூர் (திருப்பறியலூர்) என்னும் திருத்தலம் உள்ளது. சிவனை மதிக்காது, தட்சன் யாகம் செய்த தலம் இது. தட்சனின் யாகத்திற்கு பயந்து தப்பி வந்த மயில்களுக்கு அன்னை மலைமகள், அபயம் அளிக்க, அபயாம்பிகை என்று பெயர் பெற்றாள்.

தன்னை அழைக்காது தட்சன் யாகம் நடத்தியதாலும், தான் தடுத்தும் கேளாமல் பார்வதி தேவி யாகத்தில் பங்கேற்று அவமானப்பட்டு திரும்பியதாலும் சிவபெருமான், பார்வதி தேவியை பெண் மயிலாக மாறும்படி சபித்தார். தட்சனின் யாகத்தை அழித்து அவனையும் சம்ஹாரம் செய்தார்.

பெண் மயில் வடிவம் பெற்ற பார்வதி, சிவனை வணங்கிவர, சிவபெருமான் ஆண் மயில் வடிவெடுத்து பார்வதியுடன் இணைந்து நடனமாடி அவரை ஆட்கொண்டதாக கூறப்படுகின்ற வரலாற்றுக்குரிய கோவிலாகும். மயில் வடிவம் எடுத்து சிவன் ஆடிய தாண்டவம், ‘மயூரத்தாண்டவம்’ என்று கூறப்படுகிறது.

பார்வதிதேவி பெண் மயில் வடிவம் கொண்டு சிவபூஜை செய்ததற்கான சான்றாக திருக்கோவிலின் வடக்கு மதிலை ஒட்டி, கிழக்கு முகமாக அமைந்துள்ள ஆதிமாயூரநாதர் கோவிலையும், அதிலுள்ள தாமிரத்திலான மயிலையும் குறிப்பிடலாம்.

கோவில் அமைப்பு :

மயிலாடுதுறை மக்களால் பெரியக் கோவில் என்று அழைக்கப்படும், இந்தக் கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாகும். ஒன்பது நிலைகளைக் கொண்ட சிற்ப வேலைபாடுகள் மிகுந்த கோபுரம், இந்தக் கோவிலின் மிகப்பெரிய அடையாளமாக இருக்கிறது. திருக்கோவிலானது அர்த்த மண்டபம், மகா மண்டபம், கர்ப்பக்கிரகம், அந்தராண மண்டபம், வசந்த மண்டபம், சுற்றுச்சுவருடன், நான்கு புறமும் வளாகங்களும், மாடவீதிகளும் கொண்டு அழகுற காட்சியளிக்கிறது.

கோபுர தரிசனம் முடித்து தெற்கு முகமாக உள்ளேச் சென்றால் தங்க முனிஸ்வரரையும், கொடிமரத்தின் கீழே உள்ள விநாயகரையும் தரிசிக்கலாம். கொடிமரத்தின் முன்பாக மிகப்பெரிய விநாயகரும், வடக்கு புறமாக ஆறுமுகப்பெருமானும் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர்.

வசந்த மண்டபத்தைக் கடந்து நந்தீஸ்வரரை வணங்கி உள்ளே சென்றால், கருவறையில் மாயூரநாதர், சிவலிங்க திருமேனியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கருவறையின் உட்பிரகாரத்தில் அறுபத்து மூவர் உற்சவர்களாகவும், மூலவர்களாகவும் மற்றும் நால்வர்களும், சப்தமாதர்களும் காட்சி தருகின்றனர்.

தென் பிரகாரத்தில் குதம்பை சித்தர் ஐக்கியமான விநாயகர் உள்ளார். இந்த விநாயகருக்கு சந்தனகாப்பு மட்டும் சாத்தப்படுகிறது. அடுத்ததாக நடராஜர், ஆலிங்கன சந்திரசேகர், இந்திரன், அக்னி, நிருதி, எமன், வாயு ஆகியோர் பூஜித்த லிங்கங்கள் உள்ளன. மேலும் அஷ்டலட்சுமி, மகாலட்சுமி, சகஸ்ர லிங்க சன்னிதிகளும் இருக்கின்றன.

கருவறையின் நேர் பின் புறம் வள்ளி– தெய்வானை சமேத முருகப்பெருமான் காட்சி தருகிறார். வடக்குப் பிரகாரத்தின் மேற்புறத்தில் சட்டநாதரும், துர்க்காபரமேஸ்வரியும் உள்ளனர். சண்டிகேஸ்வரர் நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். அருகில் பிரம்மாவும், பிச்சாண்டவரும் காட்சியளிக்கின்றனர்.

அம்பாள் சன்னிதி :

மாயூரநாதரின் சன்னிதிக்கு வடக்கு புறத்தில் தனிச் சன்னிதியில் நான்கு திருக்கரங்களுடன், அபயாம்பிகை அம்பாள் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறாள். கை களில் கிளியும், அபய ஹஸ்தமும் கொண்டு கருணை ததும்பும் முகத்துடன் அன்னை அனைவரையும் கவர்ந்திழுக்கும் அழகுடன் காணப்படுகிறாள்.

அபயபிரதாம்பிகை, ஆங்சல் நாயகி, ஆங்சலை, மயிலம்மை போன்றவை அம்பாளின் வேறு பெயர்களாகும். அம்பிகையின் தெற்கு பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி சாந்த சொரூபமாக காட்சி தருகிறார். ஆலயத்தின் உள்ளே நுழையும்போதே இடபுறமாக எதிர்படும் தீர்த்தம், பிரம்ம தீர்த்தமாகும்.

பிரம்மதேவர் தன் படைப்புத் தொழிலை மீண்டும் கைவரப்பெற, இந்த தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வணங்கியதால் இது பிரம்ம தீர்த்தம் எனப்படுகிறது. அடுத்ததாக துலாம் மாத உற்சவ தீர்த்தவாரி நடைபெறும், காவிரி ஆற்றின் நடுவில் உள்ள இடம் ‘இடப தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது.

நந்திதேவருக்கு ஏற்பட்ட செருக்கை அடக்கி, ஈசன் அருள்பாலித்த இடம் இதுவாகும். இது தற்போது முழுக்குத்துறை என்று பெயர் பெற்றுள்ளது. இறைவன் சன்னிதியில் தட்சிணாமூர்த்திக்கு கீழ்புறம் உள்ள சதுரண கிணறு, ‘அகத்திய தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இது அகத்தியர் அமைத்ததாகும்.

தல விருட்சம் :

கோவில் தல விருட்சமாக மாமரம் உள்ளது. தலவிருட்சம் அமைந்துள்ள இடத்தை சூதவனம் என்று வடமொழி நூல்கள் கூறுகின்றன. இந்த மாமரத்திற்கு அடியில் மாமரத்து விநாயகர் என்னும் பெரிய விநாயகர் அமர்ந்து அருள்பாலிக்கிறார். இந்த திருக்கோவிலில் நடைபெறும் மிகப்பெரிய உற்சவம் துலா உற்சவம் ஆகும்.

ஐப்பசி மாதம் முழுவதும் இந்த உற்சவத்தின் போது கோவில் களை கட்டி இருக்கும். இந்த நாட்களில் மயிலாடுதுறையில் உள்ள அய்யாரப்பர், காசி விஸ்வநாதர், ஸ்ரீபடித்துறை விஸ்வநாதர், வேதாரண்யேஸ்வரர் ஆகியோரும் துலாக் கட்டத்திற்கு வந்து தீர்த்தவாரியில் கலந்து கொள்வார்கள்.

இது தவிர மாத உற்சவம், பட்ச உற்சவம், பிரதோஷம், சஷ்டி, வசந்த காலத்தில் நடைபெறும் சைத்ரோற்சவம் போன்றவை விசேஷமாக நடைபெறும் விழாக்களாகும். ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று லட்ச தீப பெருவிழாவும், நவராத்திரியில் ஒன்பது நாள், ஒன்பது விதமான அலங்காரம் அம்பாள் காட்சியளிப்பதும் சிறப்பான ஒன்றாகும்.

வைகாசி திருவிழாவில் பிரம்ம தீர்த்தத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடத்தப்படும்.

Temple 9 - அன்னம்புத்தூர் ஸ்ரீநிதீஸ்வரர் ஆலயம்!

மாமன்னன் ராஜராஜசோழன், 23-வது ஆட்சியாண்டில் (1008-ஆம் வருடம்) கட்டிய கோயில் ஒன்று, திண்டிவனம் அருகே உள்ள அன்னம்புத்தூர் கிராமத்தில் இருப்பதையும், அது முழுவதுமாகச் சிதிலமுற்று, அழகிய பிரமாண்டமான சிவலிங்கத் திருமேனி மட்டும் வெட்டவெளியில் உள்ளது
என்பதையும் கடந்த 28.12.10 இதழில், 'ஆலயம் தேடுவோம்’ பகுதியில் எழுதியிருந்தோம். திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் உள்ளது வரகுப்பட்டு. இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது அன்னம்புத்தூர்.
அடிமுடி தேடிச் சென்றதில் பொய் சொல்லி சாபம் பெற்ற ஸ்ரீபிரம்மா, தவமிருந்து ஈசனின் அருள் பெற்று பாபவிமோசனம் பெற்ற திருத் தலம் இது. அப்பேர்ப்பட்ட ஆலயம் காணாது போய், சிவனாரும் வழிபாடுகளின்றி இருக்கிறார் என்பதைச் சொல்லியிருந்தோம். ஊர்க்காரர்கள் ஒன்றிணைந்து, ஆலயத் திருப்பணிக்குழு ஒன்றை உருவாக்கி, சிவலிங்கத்துக்கு குடிசை அமைத்து, வழிபடத் துவங்கினார்கள்.
இங்கே, இறைவனின் திருநாமம் - ஸ்ரீநிதீஸ்வரர். எட்டு நிதிகளுக்கும் தலைவனான குபேரன் வழிபட்ட ஈஸ்வரன் என்பதால், ஸ்ரீநிதீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்ததாம் ஈசனுக்கு! 'குபேரனுக்கு நிதி வழங்கிய சிவனார், குடிசையில் இருப்பது தகுமோ?’ என்று தலைப்பிட்டு எழுதியிருந்தது கண்டு, மனம் கலங்கிய சக்திவிகடன் வாசகர்கள், உலகின் பல முனைகளில் இருந்தும் மளமளவென நூறு, ஆயிரம், லட்சம் என அள்ளித் தரத் துவங்கினார்கள்.
''சக்திவிகடனுக்கும் வாசகர்களுக்கும் அன்னம்புத்தூர் மக்கள் மனசார நன்றி சொல்லிக்கிறோம். சக்திவிகடன் வாசகர்கள் மட்டுமே, இதுவரை 27 லட்சம் ரூபாய்க்கும் மேலே திருப்பணிக்குத் தந்து உதவியிருக்காங்க. செங்கல் வைச்சுக் கட்டலாம்னு இருந்தோம். ஆனா, சக்திவிகடன் வாசகர்கள் கொடுத்த ஊக்கத்தால, கற்றளிக் கோயிலாவே, அதாவது முழுக்க முழுக்க கருங்கல் கொண்டு கோயிலைக் கட்டலாம்னு முடிவு பண்ணி திருப்பணி செஞ்சுக் கிட்டிருக்கோம்'' என்கின்றனர் திருப்பணிக் குழுவினர்.
 
''ஒருகாலத்துல செங்கல் கட்டுமானக் கோயில்களை, கற்றளிக் கோயிலா மாற்றி அமைத்தான் ராஜராஜசோழன். அன்னம்புத்தூர்ல அந்த மாமன்னன் கட்டிய கோயிலை, அவன் திருவுளப்படியே கற்றளிக் கோயிலா அமைக்கறது தெரிஞ்சதும், சக்திவிகடன் வாசகர்களும் மற்ற பல அன்பர்களும் 'இன்னும் தர்றோம்’னு நிதி கொடுத்தாங்க. சிவனாரின் சந்நிதி, அம்பாள் சந்நிதி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி விக்கிரகம், குபேரர் சந்நிதின்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு சந்நிதியை எடுத்துக்கிட்டு, அதுக்கு உண்டான செலவை எடுத்துக்கறோம்னு சொல்லி, திருப்பணிகள் மளமளன்னு நடந்துக்கிட்டிருக்கு'' என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்கள் ஊர்மக்கள்.
''இப்ப, பிரதோஷம் தவறாம அபிஷேகம் பண்றதுக்கு, நிறைய பக்தர்கள் எங்கிருந்தெல்லாமோ வர்றாங்க. எங்க பிரார்த்தனை நிறைவேறிருச்சுன்னு சொல்லி, நேர்த்திக்கடனா, திருப்பணிக்குக் கொடுத்து உதவுறாங்க. இன்னும் உதவி கிடைச்சு, கோயில் இன்னும் பிரமாண்டமா அமையணும்!'' என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார் கோயில் அர்ச்சகர்.
கற்றளிக் கோயிலில் குடிகொள்ளும் ஸ்ரீநிதீஸ்வரருக்கு அள்ளிக் கொடுங்கள். குபேர யோகம் உங்களுக்கும் கிடைக்கட்டும்!

Temple 8 - படிக்காசுநாதர்

புதுக்கோட்டை- அறந்தாங்கி சாலையில் உள்ள ஊர் கீழாநிலைக்கோட்டை. இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது நெடுங்குடி கயிலாசநாதபுரம். இந்தத் தலத்தில் மிக அற்புதமாகக் கோயில்கொண்டு அருள்பாலிக்கிறார் ஸ்ரீகயிலாசநாதர். இவருக்குப் படிக்காசுநாதர் என்றும் சிறப்புப் பெயர் உண்டு. ஏன் தெரியுமா?
வில்வ மரங்கள் அடர்ந்த ஒரு வனத்தின் மத்தியில், பெரிய மலை ஒன்று இருந்தது. அந்த மலையில் பெரிய சிரஞ்ஜீவி, சின்ன சிரஞ்ஜீவி எனும் அசுர சகோதரர்கள் இருவர் வாழ்ந்து வந்தனர். சிவபக்தர்களான இருவரும் தினமும் சிவபூஜை செய்துவிட்டே மற்ற வேலைகளைத் துவங்குவர்.
பூஜைக்குத் தேவையான சிவலிங்கத்தையும், மற்ற பொருட்களையும் சின்ன சிரஞ்ஜீவி சேகரித்து வருவான். ஒருநாள், அவன் காசியிலிருந்து சிவலிங்கம் கொண்டு வரத் தாமதமானது. எனவே, மண்ணில் லிங்கம் அமைத்து பூஜையை முடித்தான் பெரிய சிரஞ்ஜீவி. தான் வருவதற்குள் பூஜை நிறைவுற்றதை அறிந்த சின்ன சிரஞ்ஜீவி கோபம் கொண்டான். 'மண்ணால் செய்த லிங்கத்தையும், இந்த மலையையும் அழிக்கிறேன் பார்...’ என்று அண்ணனிடம் சவால் விட்டவன், திருமாலை தியானித்து கடும் தவத்தில் மூழ்கினான். மூத்தவன் கலங்கினான். தம்பியின் செயலால் லிங்கத்துக்கு பாதிப்பு ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்ற வேண்டுதலுடன், தானும் திருமாலைக் குறித்து தவத்தில் ஆழ்ந்தான்.
அசுர சகோதரர்களுக்கு அருள்புரிய சித்தம் கொண்டார் திருமால். சின்னச் சிரஞ்ஜீவிக்காக ஆதிசேஷனையும், பெரிய சிரஞ்ஜீவிக்காக கருடனையும் அனுப்பிவைத்தார். ஆதிசேஷன், மண் லிங்கம் அமைந்த மலையை அசைக்க ஆரம்பித்தது. கருடனோ அதைத் தடுக்கும் விதமாக மலையைச் சுற்றி வட்டமிட ஆரம்பித்தது. கருடனைக் கண்டதும் பாம்பு அங்கிருந்து ஓடிவிட்டது. கருடனும் திருமாலிடம் திரும்பியது. அப்போது அசுர சகோதரர்கள் முன் காட்சியளித்த திருமால், ''உரிய காலத்தில் சிவபூஜை செய்வதே சிறந்தது. இதைப் புரிந்துகொண்டு சகோதரர்கள் இருவரும் ஒற்றுமையுடன் இருந்து வழிபடுங்கள். நீங்கள் சிவபூஜை செய்த இந்தத் தலம் புகழ்பெற்றுத் திகழும்'' என்று அருள்புரிந்து மறைந்தார்.
காலங்கள் ஓடின. சிவலிங்கம் மண்ணுக்குள் மறைந்தது. பல்லாயிரம் வருடங்கள் கழித்து, இந்தப் பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரிகள் சிலர் இங்கே சுயம்புவாக வெளிப்பட்ட சிவலிங்கத் திருமேனியைத் தரிசித்தனர். அந்த லிங்கத்துக்கு ஒரு படி பால் ஊற்றி அபிஷேகம் செய்து வழிபட்டுச் சென்றனர். மறுநாள், அந்தப் பாலுக்கு உரிய விலையாக, சிவலிங்கம் அருகில் பொற்காசுகள் இருந்ததைக் கண்டனர். அடுத்தடுத்த நாட்களிலும் இந்த அற்புதம் தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து, அந்த லிங்கத் திருமேனியனுக்கு ஸ்ரீபடிக்காசுநாதர் என்று திருப்பெயர் ஏற்பட்டதாம்.
கி.பி 13-ஆம் நூற்றாண்டில், சுந்தரபாண்டிய மன்னனால் திருப்பணி கண்ட இந்த ஆலயத்தில், மகாசிவராத்திரி மிக விசேஷம்! அன்று சிவனாருக்கு நான்கு கால பூஜைகள் நடைபெறும். சுற்றுவட்டார மக்கள் 48 நாட்கள் விரதம் இருந்து, இந்தத் தலத்துக்குப் பாத யாத்திரையாக வந்து, மகா சிவராத்திரி தினத்தில் ஸ்ரீகாசி விஸ்வநாதரை வழிபட்டு வரம் பெற்றுச் செல்கிறார்கள். இதனால் சங்கடங்கள் நீங்கி வாழ்க்கை செழிக்கும் என்பது நம்பிக்கை. மேலும், சிவனாருக்கு உகந்த திருநாட்களில் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டுச் சென்றால் திருமண வரம், பிள்ளை பாக்கியம் முதலான வேண்டுதல்கள் பலிக்கும் என்கிறார்கள்.
இங்கே அருளும் அம்பாள் ஸ்ரீபிரசன்ன நாயகியும் சிறந்த வரப்ரசாதி. இவளை வழிபட, வாழ்க்கை பிரகாசமாகும். மேலும், இங்குள்ள ஸ்ரீபைரவரை வழிபட சத்ரு பயம், தீவினைத் தாக்குதல் முதலானவை நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
-